(இ - ள்.) எரிபொன் வேலி - ஒளிரும் பூணாகிய வேலி சூழ்ந்த; இளைமை அம் கழனி இளமையாகிய கழனியிலே; சாயல் ஏர் உழுது - தன் சாயலாகிய ஏராலே உழுது; வளை முயங்கு உருவம் மென்தோள் வரம்புபோய் - வளை பொருந்திய அழகிய மென்தோளாகிய வரம்பு சூழ்போகச் செய்து; வனப்பு வித்தி - தன் வனப்பை விதைத்தலால்; கிளை நரம்பு இசையும் கூத்தும் கேழ்த்தது எழுந்து ஈன்ற - கிளை நரம்புகளை யாழிசையும் கூத்துமாக நிறங்கொண்டெழுந்து ஈன்ற; காம விளைபயன் - பின்பு ஈன்ற காமமாகிய வினைவின் பயனை; வீணை வேந்து உறையும் - யாழ் வால்லோன்ஒழுகினான்.
|