முத்தி இலம்பகம் |
1469 |
|
|
சாரணர்பால் அறவுரை கேட்டுப் பழம்பிறப்புணர்ந்த சீவகன் விரைந்து துறவு பூண விழைந்தான். நட்தட்டனை அரசாட்சியை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினன். அவனும் துறவுள்ளமுடையவனாய் அதற்கிணங்கிலன். ஆதலால் தன் மூத்தமகனாகிய சச்சந்தனை யழைத்து அரசியலறமெலாம் நன்கு விளக்கிக்கூறிக் கோமுடி கவித்தனன்.நந்தட்டன் மைந்தரைக்குறுநில மன்னர்களாக்கினன்.
|
இவ்வாறியற்றிய பின்னர், காந்தருவதத்தை முதலிய மனைவியர்க்குத் தான் துறவறம்புகக் கருதியதனை அறிவித்தான். அவரெல்லாம் ஆற்றொணாது அழுது புலம்பினர். நகரமெல்லாம் அழுகுரல் நிரம்பியது. ஆடலும்பாடலும் அவிந்தன. அவரை யெல்லாம் சீவகன் அறவுரைகளால் தெருட்டித் தேற்றினன.் தேவியர் தாமும் தவஞ்செய்யத் துணிந்தனர். அவரை விசயைபாற் சேர்த்து ஆண்டுத் தவஞ்செய்யப் பணித்தனன்.
|
தேவர்கள் சீவகசாமியைச் சிவிகையிலேற்றிச் சமவ சரணத்தை எய்தினர். ஆண்டுச் சீவகன் துறவுக் கோலங்கொண்டனன். அருகக் கடவுளை வணங்கினன். ஆண்டுச் சுதஞ்சணன் வந்து சீவகனைக் கண்டு சென்றான்.
|
நந்தட்டன் முதலானோரும் நோன்பியற்றித் தூயராகினர். மகதவேந்தன் சீவகன் தவநிலை கண்டு வியந்தான். ஒரு முனிவரால் அவன் பெருமையை உணர்ந்தனன் அம் மன்னவன். தேவியரும் இறை நெறிநின்று மெய்யுணர்ந்து வீடு பெற்றனர். சீவகன் முத்தி பெறுதற்குரிய காலமும் நண்ணிற்று. விண்ணும் மண்ணுந் தொழும்படி கேவலஞானமென்னும் மடந்தையை மணந்தனன்; அவளை என்றென்றும் பிரியாமல் இன்பப்பெருங்கடலுள் அழுந்தினான்.
|
க. விசயமாதேவியார் துறவு
|
2599 |
நீரேந்தி நெய்ம்மிதந்து நிணம்வாய்ப் பில்கி யழல்விம்மிப் | |
|
போரேந்திப் பூவணிந்து புலவுநாறும் புகழ்வேலோன் | |
|
காரேந் திடிமுரச மார்ப்பக் காய்பொற் கலன்சிந்திப் | |
|
பாரேந்திச் செல்லுநாட் பட்ட தாநாம் பகர்வதே. | |
|
(இ - ள்.) நெய் மிதந்து - நெய் மிதந்து கிடக்கப்பட்டு; அழல் விம்மி - சீற்றத்தீ நிறைந்து; போர் ஏந்தி - போர்த்தொழிலை மேற்கொண்டு; நிணம் வாய்ப் பில்கி - நிணத்தை வாயினின்றும் சிறு துவலையாகவிட்டு; நீரேந்தி - மண்ணும் நீராடி; பூ அணிந்து - மலர் அணிந்து; புலவு நாறும் புகழ
|