நாமகள் இலம்பகம் |
147 |
|
269 |
சாதலும் பிறத்த றானுந் |
|
தம்வினைப் பயத்தி னாகு |
|
மாதலு மழிவு மெல்லா |
|
மவைபொருட் கியல்பு கண்டாய் |
|
நோதலும் பரிவு மெல்லா |
|
நுண்ணுணர் வின்மை யன்றே |
|
பேதைநீ பெரிதும் பொல்லாய் |
|
பெய்வளைத் தோளி யென்றான். |
|
(இ - ள்.) பெய்வளைத் தோளி பேதை - வளையணிந்த தோள்களையுடைய பேதையே!; தம் வினைப்பயத்தின் ஆகும் சாதலும் பிறத்தல்தானும் ஆதலும் அழிவும் அவை எல்லாம் - தம் வினையின் பயனால் நேரும் இறப்பும் பிறப்பும் ஆக்கமும் அழிவும் ஆகிய அவை யாவும்; பொருட்கு இயல்பு கண்டாய் - பொருள்களுக்கு இயற்கைகாண்; நோதலும் பரிவும் எல்லாம் நுண்ணுணர்வு இன்மை அன்றே - இவையிற்றுட் சாதல் முதலியவற்றிற்குத் துன்புறுதலும் பிறத்தல் முதலியவற்றிற்கு அன்புறுதலும் ஆகிய இச்செயற்கெல்லாம் காரணம் அறிவின்மையே அல்லவோ; நீ பெரிதும் பொல்லாய் - (இதை உணராத) நீ மிகவும் பொல்லாதவளாகிறாய்.
|
|
(வி - ம்.) சாதலும் பிறத்தல் தானும் ஆதலும் அழிவும் எல்லாம் தம் வினைப்பயத்தின் ஆகும். அவற்றுள், சாதற்கும் அழிதற்கும் நோதலும், பிறத்தற்கும் ஆதற்கும் பரிதலும் நுண்ணுணர்வின்மையாம். அவை பொருட்கு இயல்பு, என்றவாறு.
|
|
பரிதல் - அன்புறுதல். இவற்றை யுணராமையால் நீ பெரிதும் பொல்லாய் என்றான் என்க.
|
( 240 ) |
270 |
தொல்லைநம் பிறவி யெண்ணிற் |
|
றொடுகடன் மணலு மாற்றா |
|
வெல்லைய வவற்று ளெல்லா |
|
மேதிலம் பிறந்து நீங்கிச் |
|
செல்லுமக் கதிக டம்முட் |
|
சேரலஞ் சோ்ந்து நின்ற |
|
வில்லினு ளிரண்டு நாளைச் |
|
சுற்றமே யிரங்கல் வேண்டா. |
|
(இ - ள்.) தொல்லை நம் பிறவி எண்ணின் - பழைமையான நம் பிறப்புக்களை ஆராய்ந்தால்; தொடுகடல் மணலும் ஆற்றா எல்லைய - தோண்டப்பெற்ற கடலின் மணலும் ஒப்பிடப்பற்றாத
|
|