பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1473 

வெள்ளம்போலச் சொரிந்து; கோவிந்தன் ஊட்டப்பண்ணி - கோவிந்தன் ஊட்டும்படி செய்து; பைந்தார் வேந்தன் பயந்தாள் - பைந்தார் வேந்தனைப் பெற்றவள்; பரிவு அகன்றாள் - வருத்தம் நீங்கினாள்.

   (வி - ம்.) தோழர் ஐந்நூற்று நால்வர்க்கும் சீவகனுக்குமாக ஐந்நூற்றைந்து சிறுவர்கட்குப் பாலளந்தனர். கோவிந்தன் : நந்தகோன். பரிவு : இங்குக் கூறியன எல்லாம் செய்துமுடிக்கவேண்டும் என்னும் வருத்தம்.

( 6 )
2605 தோடார் புனைகோதை சுநந்தை சோ்ந்து தொழுதாளைப்
பீடார் பெருஞ்சிறுவற் பயந்தீர் வம்மி னெனப்புல்லி
நாடார் புகழாளை நாண மொழிகள் பலகூறிக்
கோடாக் குருகுலத்தை விளக்கிட் டாளை விளக்கினாள்.

   (இ - ள்.) தோடு ஆர்புனை கோதை சுநந்தை சேர்ந்து தொழுதாளை - இதழ் பொருந்திய மலர்மாலையுடைய சுநந்தை வந்து தொழுதபோது, அவளை; பீடு ஆர் பெருஞ்சிறுவன் பயந்தீர் வம்மின் எனப் புல்லி - பெருமை பொருந்திய பெருமகனைப் பெற்றீர் வம்மின் என்று தழுவிக்கொண்டு; நாடு ஆர் புகழாளை - உலகம் புகழ்தற்குக் காரணமானவளை; நாண மொழிகள் பல கூறி - நாணுறும்படி புகழ்மொழிகள் பல உரைத்து; கோடாக் குருகுலத்தை விளக்கிட்டாளை - கெடாத குருகுலத்தை விளக்கிய சுநந்தையை; விளக்கினாள்- (விசயை) விளக்கமுறச் செய்தாள்.

   (வி - ம்.) தான் பெற்றவளாயினும் வளர்த்தவள் சுநந்தையே யாதலின் முகமனுரையால் இங்ஙனங் கூறினாள். இனிப், 'புகழாளை'என்பதில், 'ஐ' அசை என ஆக்கிப் புகழாள் விசையை என்பர் நச்சினார்க்கினியர் புகழ்மொழிகளால் நாணினாள். நாணியவள் சுநந்தை. சீவகனை வளர்த்ததனால் உலகு வாழச் செய்தவள் என விளக்கினாள். விளக்கிட்டாள:் சுநந்தை. இது சுட்டுப்பெயர்.

( 7 )
2606 மறையொன் றுரைப்பனபோன்
  மலர்ந்து நீண்டு செவிவாய்வைத்
துறைகின்ற வோடரிக்க
  ணுருவக் கொம்பி னெண்மரு
மிறைவி யடிபணிய
  வெடுத்துப் புல்லி யுலகாளுஞ்
சிறுவர்ப் பயந்திறைவற்
  றெளிவீ ரென்றா டிருவன்னாள்.

   (இ - ள்.) மறை ஒன்று உரைப்பனபோல் - மறைமொழி ஒன்றைக் கூறுவனபோல; செவி வாய் வைத்து - செவியிடத்தே