பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1475 

வருக என்றாள் - மணம் பொருந்திய நல்ல மாலையணிந்த மன்னனே! இங்கே வருக என்று (சீவகனைக்) கூறினாள்.

   (வி - ம்.) முன்னர். 'இறைவற் றெளிவீர்' (சீவக. 2606) எனவும் ஈண்டு, 'பிரியற்பீர்' எனவுங் கூறினமையால், பின்னர் என்னிடத்தே வந்து துறப்பீர் என்றாளாயிற்று.

( 9 )
2608 சிங்க நடப்பதுபோற் சோ்ந்துபூத்தூய்ப் பலர்வாழ்த்தத்
தங்கா விருப்பிற்றம் பெருமான்பாத முடிதீட்டி
யெங்கோ பணியென்னா வஞ்சாநடுங்கா விருவிற்கட்
பொங்க விடுதவிசி லிருந்தான்போரே றனையானே.

   (இ - ள்.) பலர் பூத்தூய் வாழ்த்த - பலர் மலர் தூவி வாழ்த்த; சிங்கம் நடப்பதுபோல் சேர்ந்து - சிங்கம் நடப்பது போல நடந்து சென்று; தங்கா விருப்பின் தம் பெருமான் பாதம் முடி சூட்டி - அமையாத விருப்பத்துடன் விசயையின் அடியிலே முடியை வைத்து வணங்கி; எங்கோ பணி என்னா - எனக்குத் தகும் பணிவிடை இனி எங்கே என்று வினவியவாறு; அஞ்சா நடுங்கா - உள்ளம் அஞ்சி மெய்ந்நடுங்கி; இரு வில் கண் பொங்க இடுதவிசில் - இரண்டு விற்கிடை நீளம் அகல இட்ட அணையின் மேலே; போரேறு அனையான் இருந்தான் - போர்ச் சிங்கம் போன்றவன் இருந்தான்.

   (வி - ம்.) பெருமான் : னஃகான் ஒற்று மகடூஉ உணர்த்திற்று. அஞ்சியதும் நடுங்கியதும் எதிரில் இருத்தற்கு. இவள் கூறிய அறம் எல்லாம் தான் செய்து முடித்தலின், இன்னும் அவை உளவோ என்பது தோன்ற, 'எங்கோ பணி' என்றான்.

( 10 )

வேறு

2609 கொற்றவி மகனைநோக்கிக்
  கூறின ளென்ப நுங்கோக்
குற்றத்தைப் பிறர்கள்கூற
  வுணர்ந்தனை யாயி னானு
மிற்றென வுரைப்பக் கேண்மோ
  விலங்குபூ ணலங்கன் மார்பிற்
செற்றவர்ச் செகுத்த வைவேற்
  சீவக சாமி யென்றாள்.

   (இ - ள்.) கொற்றவி மகனை நோக்கி - விசயை மகனைப் பார்த்து; கூறினள் - கூறினாள்; இலங்கு பூண் அலங்கல் மார்பின் - விளங்கும் பூணும் மலர் மாலையும் அணிந்த மார்பினையும்; செற்றவர்ச் செகுத்த வைவேல்- பகைவரை வென்ற