| முத்தி இலம்பகம் |
1476 |
|
|
|
கூரிய வேலினையும் உடைய; சீவகசாமி!-சீவகசாமியே!; நும் கோக்கு உற்றதைப் பிறர்கள் கூற உணர்ந்தனையாயின் - நும் அரசற்கு நேர்ந்ததை மற்றோர் உரைக்க அறிந்தனை யெனினும்; நானும் இற்று என உரைப்பக் கேண்மோ - யானும் இத்தகைத் தென்று கூறக் கேட்பாயாக.
|
|
(வி - ம்.) என்ப : அசை. 'உணர்ந்தனை என்ப' எனக் கூட்டி, உணர்ந்தாய் என்பார்கள்' என்றுரை கூறுவர் நச்சினார்க்கினியர். கேண்மோ : மோ : முன்னிலை அசை. 'சாமி' என்னும் ஒருமை 'நும்' என்னும் பன்மையொடு மயங்கிற்று
|
( 11 ) |
| 2610 |
நாகத்தால் விழுங்கப் பட்ட | |
| |
நகைமதிக் கடவுள் போலப் | |
| |
போகத்தால் விழுங்கப் பட்டுப் | |
| |
புறப்படான் புன்சொ னாணா | |
| |
னாகத்தா னமைச்சர் நுண்ணூற் | |
| |
றோட்டியா லழுத்தி வெல்லும் | |
| |
பாகர்க்குந் தொடக்க நில்லாப் | |
| |
பகடுபோற் பொங்கி யிட்டான். | |
|
|
(இ - ள்.) நாகத்தால் விழுங்கப்பட்ட நகை மதிக் கடவுள் போல - பாம்பினால் விழுங்கப்பட்ட ஒளியை உடைய திங்களைப் போல; போகத்தால் விழுங்கப்பட்டு - பெண்ணின்பத்தாலே விழுங்கப்பட்டு; புறப்படான் - அதிலிருந்து வெளிவராதவனாகி; புன்சொல் நாணான் - இழிமொழிக்கு நாணமுறாமல்; தான் ஆக அமைச்சர் நுண் நூல் தோட்டியால் அழுத்தி - தான் ஆகிவிடவும் மேம்பாடடைய அமைச்சர்கள் நுண்ணிய நூல்களாகிய அங்குசத்தாலே அழுத்தவும்; வெல்லும் பாகர்க்குத் தொடக்க நில்லாப் பகடுபோல் பொங்கியிட்டான் - வெற்றியுறும் பாகர்க்குத் தொடக்கவும் நில்லாத களிறுபோற் காமத்தே பொங்கிவிட்டான்.
|
|
(வி - ம்.) இது முதல் ஐந்து செய்யுட்கள் ஒரு தொடர்.
|
|
நாகம் - இராகுக்கோள். நகை - ஒளி. போகம் - நுகர்ச்சி. புன்சொல் - பழிச்சொல்; தான் ஆக என மாறுக. தான் என்றது. சச்சந்தனை. பொங்கியிட்டான் : ஒரு சொல்.
|
( 12 ) |
| 2611 |
நுண்மதி போன்று தோன்றா | |
| |
நுணுகிய நுசுப்பி னார்தங் | |
| |
கண்வலைப் பட்ட போழ்தே | |
| |
கடுநவை யரவோ டொக்கும். | |
பெண்மையைப் பெண்மை யென்னார் | |
|