பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1477 

2611   பேருணர் வுடைய நீரா
ரண்ணலைத் தெருட்ட றேற்றா
  தமைச்சரு மகன்று விட்டார்.

   (இ - ள்.) நுண்மதி போன்று தோன்றா நுணுகிய நுசுப்பினார்தம் - நுண்ணறிவு போல வெளிப்படையாகத் தெரியாத சிற்றிடையாரின்; கண்வலைப் பட்ட போழ்தே - கண்ணாகிய வலையிற் பட்டபொழுதே; கடுநவை அரவோடு ஒக்கும் பெண்மையை - கொடிய குற்றத்தையுடைய பாம்பைப்போலுற்ற பெண்மையை; பேர் உணர்வு உடைய நீரார் பெண்மை என்னார் - பேரறிவுடைய பண்பினார் பெண்மை எனக் கூறார் (ஆகையினால்); அண்ணலைத் தெருட்டல் தேற்றாது - அரசனைத் தெருட்டவும் தெளியாமல்; அமைச்சரும் அகன்றுவிட்டார் - அமைச்சரும் நீங்கிவிட்டனர்.

   (வி - ம்.) நுண்மதி - நுண்ணறிவு - அறிவு அருவப் பொருளாகலின் இங்ஙனம் உவமையாக எடுத்தார். கண்வலை : பண்புத்தொகை. கடுநவை - கொடிய குற்றஞ்செய்தலையுடைய. அரவு பெண்மைக்குவமை. அண்ணல்; சச்சந்தன்.

( 13 )
2612 கற்சிறை யழித்து வெள்ளங்
  கடற்கவா யாங்குக் கற்றோர்
சொற்சிறை யழித்து வேந்தன்
  றுணைமுலை துறத்தல் செல்லான்
விற்சிறை கொண்ட போலும்
  புருவத்து விளங்கு வேற்க
ணற்சிறைப் பட்டுநாடு நகரமுங்
  காவல் விட்டான்.

   (இ - ள்.) கல் சிறை அழித்து வெள்ளம் கடற்கு அவாய் ஆங்கு - கல்லாகிய அணையை அழித்து வெள்ளம் கடலை விரும்பிச் சென்றாற்போல; வேந்தன் - அரசன்; கற்றோர் சொல் சிறை அழித்து - கற்ற அமைச்சரின் சொல்லாகிய காவலை அழித்து; துணைமுலை துறத்தல் செல்லான் - இருமுலைகளின் இன்பத்தை விட்டு நீங்கானாகி; வில் சிறை கொண்டபோலும் புருவத்து விளங்கு வேற்கண் நல்சிறைப்பட்டு - வில்லைச் சிறைப்படுத்தினாற்போன்ற புருவத்தின்கீழ் விளங்கும் வேல் போன்ற கண்ணாகிய தப்பாத சிறையிலே அகப்பட்டு; நாடும் நகரமும் காவல் விட்டான் - நாட்டையும் நகரத்தையும் காப்பது ஒழிந்தான்.