பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1479 

அந்தப்புரத்தை முற்றுகையிட்டு; கனைகுரல் உருமின் ஆர்ப்ப - ஒலிக்குங் குரலாலே இடிபோலக் (கட்டியங்காரன்) ஆர்ப்ப; காவலன் நின்னை வேண்டி - அரசன் நீ பிழைப்பதை விரும்பி; என்னை வினைமயிற் பொறியின் போக்கி - என்னைத் தொழிற்பாடுடைய மயிற்பொறியிலே முதலிற் போக்கி; விண் விரும்பிப் புக்கான் - வீரருலகை விரும்பி அடைந்தான்; புனைமுடி வேந்த! - புனைந்த முடிமன்னனே!; போவல் - யான் துறவிற் செல்வேன்; போற்று என - (நீயும் இத்தகைய காமத்தை) அடக்குக என்றுரைக்க; மயங்கி வீழ்ந்தான் - சீவகனும் அதுகேட்டு மயங்கி விழுந்தான்.

   (வி - ம்.) அறுத்த - கீழறுத்து. முற்றி - முற்றுகையிட்டு. காவலன்:  சச்சந்தன். நின் ஆக்கத்தைவேண்டி என்றவாறு. போவல் - துறத்தற்குப் போவேன். போற்று - போற்றுக.

( 16 )
2615 சீதநீர் தெளித்துச் செம்பொற்
  றிருந்துசாந் தாற்றி தம்மான்
மாதரார் பலரும் வீச
  வளர்ந்தெழு சிங்கம் போலப்
போதொடு கலங்கள் சோர
  வெழுந்துபொன் னார மார்பன்
யாதெனக் கடிகண் முன்னே
  யருளிய தென்னச் சொன்னாள்.

   (இ - ள்.) மாதரார் பலரும் - (அப்போது) மங்கையர் பலரும்; சீத நீர் தெளித்து - குளிர்ந்த நீரைத் தெளித்து; செம்பொன் திருந்து சாந்தாற்றி தம்மால் வீச - செம் பொன்னால் அழகுற அமைத்த சாந்தாற்றிகளால் வீசியதால்; வளர்ந்து எழு சிங்கம் போல - துயில்கொண்டு எழுகின்ற சிங்கம் போல; பொன் ஆர மார்பன் - பொன் மாலை பொருந்திய மார்பன்; போதொடு கலங்கள் சோர எழுந்து - மலரும் அணிகலனும் சோர எழுந்து; அடிகள் எனக்கு முன்னே அருளியது யாது என்ன - அடிகள் எனக்கு முன்னர்க் கூறியருளியது யாது என்று வினவ; சொன்னாள் - விசயை கூறினாள்.

   (வி - ம்.) சீதம் - குளிர்ச்சி. சாந்தாற்றி - ஒருவகை விசிறி. வளர்தல் - துயிலுதல். மார்பன் : சீவகன். அடிகள் : விளி.

( 17 )
2616 பிறந்துநாம் பெற்ற வாணா
  ளித்துணை யென்ப தொன்று
மறிந்திலம் வாழ்து மென்னு
  மவாவினு ளழுந்து கின்றாங்
கறந்துகூற் றுண்ணு ஞான்று
  கண்புதைத் திரங்கி னல்லா
லிறந்தநாள் யாவர்மீட்பா
  ரிற்றெனப் பெயர்க்க லாமே.