| முத்தி இலம்பகம் |
1486 |
|
|
|
(இ - ள்.) மைதிரண்ட வார்குழல்மேல் - கருமை திரண்ட நீண்ட சிகையிலே; வண்டு ஆர்ப்ப மென் மல்லிகை மாலை சூடி - வண்டுகள் முரல மெல்லிய மல்லிகை மாலையை அணிந்து; கை திரண்ட வேல் ஏந்திக் காரிகையார் மருளக் காமன்போற் சென்றார் - காம்பு திரண்ட வேலை ஏந்தியவாறு மங்கையர் மயங்கக் காமனைப்போலச் சென்றவர்கள்; ஐ திரண்டு கண்டம் குரைப்ப - சிலேட்டுமம் திரண்டு கழுத்திலே ஒலியுண்டாக; நெய்திரண்டாற்போல் உமிழ்ந்து - நெய் திரண்டாற்போலக் கோழையை உமிழந்து; ஓர் தண்டு ஊன்றி அறிவின் தள்ளி - ஒரு தண்டை ஆதரவாக ஊன்றி, அறிவிலிருந்து விலகி; நிற்கும் இளமையோ நிலையாதே காண் - நிற்பதற்குக் காரணமான இளமையோ நிலை அற்றது காண்.
|
|
(வி - ம்.) இது சீவகனுக்குக் கூறியது.
|
|
2619 முதல் இச் செய்யுள்வரை அறவுரை கூறினாள்.
|
|
இஃது இளமை நிலையாமை கூறிற்று.
|
|
இனி, மைதிரண்ட வார்குழன்மேல் வண்டார்ப்ப மல்லிகை மென் மாலைசூடிச் சென்ற காரிகையாரும் அக்காரிகையார் மருளக் காமன் போற் சென்றாரும் எனப் பிரித்துக் கூட்டிச் சிலசொல் வருவித்து முடித்தல் இச்செய்யுட்குச் சிறப்பாகும். இங்ஙனம் செய்யாக்கால் அடை மொழிகள் ஒவ்வாமை யுணர்க. ஐ - சிலேத்துமம். குரைப்ப - இரும.
|
( 28 ) |
வேறு
|
| 2627 |
என்றலுஞ் சுநந்தை சொல்லு | |
| |
மிறைவிதான் கண்ட தையா | |
| |
நன்றுமஃ தாக வன்றே | |
| |
யாயினு மாக யானு | |
| |
மொன்றினன் றுறப்ப லென்ன | |
| |
வொள்ளெரி தவழ்ந்த வெண்ணெய்க் | |
| |
குன்றுபோல் யாது மின்றிக் | |
| |
குழைந்துமெய்ம் மறந்து நின்றான். | |
|
|
(இ - ள்.) என்றலும் சுநந்தை சொல்லும் - என்று விசயை கூறிய அளவிலே சுநந்தை கூறுவாள்; ஐயா! - ஐயனே!; இறைவி கண்டது நன்றும் அஃது ஆக - அரசி கருதியது நன்றாயினும் ஆகுக; அன்றே ஆயினும் ஆக - தீதாயினும் ஆகுக; யானும் ஒன்றினன் - யானும் அதனைப் பொருந்தினேன்; துறப்பல் என்ன - (எனவே, இனி) துறவு பூண்பேன் என்றுரைப்ப; ஒள் எரி தவழ்ந்த வெண்ணெய்க் குன்றுபோல் - பெருந் தீ
|