| முத்தி இலம்பகம் |
1490 |
|
|
|
திறவிதின் - நன்றாக; தவிசு தூபம் திருச்சுடர் விளக்கு இட்டார் - இருக்கையையும் நறும்புகையையும் அழகிய ஒளிதரும் விளக்கையும் இட்டனர்.
|
|
|
(வி - ம்.) அடிகள் : விளி. வல்லே - விரைவில். இழைத்து - கோலஞ் செய்து. நற - தேன், விதானித்து - மேற்கட்டியிட்டு. திறவிதின் - நன்றாக.
|
( 35 ) |
வேறு
|
|
| 2634 |
பாலினாற் சீறடி கழுவிப் பைந்துகி | |
| |
னூலினா லியன்றன நுனித்த வெண்மைய | |
| |
காலனைக் கண்புதைத் தாங்கு வெம்முலை | |
| |
மேல்வளாய் வீக்கினார் விதியி னென்பவே. | |
| |
|
|
(இ - ள்.) விதியின் பாலினால் சீறடி கழுவி - நூல் முறைப்படி பாலால் அவர்களுடைய சிற்றடிகளைக் கழுவி ; நூலினால் இயன்றன - பருத்தி நூலால் நெய்யப்பட்டனவும்; நுனித்த வெண்மைய பைந்துகில் - மெல்லியவாய் வெண்மையுடையவும் ஆகிய புதிய ஆடையை; காலனைக் கண்புதைத் தாங்கு - கூற்றுவவனுடைய கண்களைக் கட்டினாற்போல; வெம்முலைமேல் வளாய் வீக்கினார் - விருப்பூட்டும் முலைகளின்மேற் சூழ்ந்து இறுகக் கட்டினர்.
|
|
|
(வி - ம்.) இஃது இருவர் தீக்கையும் கூறிற்று. கண் புதைத்தல். அவனுடைய கொலைத்தொழிலை மாற்றுவித்தல். நச்சினார்க்கினியர், ‘முன்பு காலனைக் கண்புதைத்தாங்கு‘ என விளக்கங் கூறுவர்.
|
( 36 ) |
| 2635 |
தேனுலா மாலையுங் கலனுஞ் சிந்துபு | |
| |
பானிலாக் கதிரன வம்மென் பைந்துகி | |
| |
றானுரலாய்த் தடமுலை முற்றஞ் சூழ்ந்தரோ | |
| |
வேனிலான் வருநெறி வெண்முள் வித்தினார். | |
| |
|
|
(இ - ள்.) தேன் உலாம் மாலையும் கலனும் சிந்துபு - வண்டுகள் உலவும் மாலையையும் கலன்களையும் வாங்கிவிட்டு; பால் நிலாக் கதிர் அன அம்மேன் பைந்துகில் - பால்போன்ற நிலவின் கதிர்போன்ற அழகிய மெல்லிய பைந்துகிலை; உலாய் - உலாவ; தடமுலை முற்றம் சூழ்ந்து - பருத்த முலைகளின் முற்றத்தைச் சூழ்ந்து; வேனிலான் வரும்நெறி வெண்முள் வித்தினார் - காமன் வரும் வழியை வெள்ளிய முள்ளால் அடைத்தனர்.
|
|
|
(வி - ம்.) உலாய் - உலாவ : எச்சத்திரிபு . வெண்துகிலாதலின் ‘வெண்முள்‘ என்றார். இஃது மற்றைய மாதரின் தீக்கை கூறியதென்பர்.
|
( 37 ) |