| முத்தி இலம்பகம் | 
1494  | 
 | 
 
  | 
 
| 
 இந் நகரினுள்ளே உறைக என - அடிகள் சில நாட்கள் இந்த நகரிலே உறைக என்று; அண்ணல் கூற - சீவகன் வேண்ட; முடிகெழு மன்னற்கு ஒன்றும் மறுமொழி கொடாது - முடியுடைய வேந்தனுக்கு யாதும் விடை கூறாமல்; படிமம் போன்று தேவி இருப்ப - பாவை போன்று விசயை இருந்தாளாக; பம்மை நோக்கிச் சொல்லினாள் - பம்மை அந்நிலையை நோக்கிக் கூறினாள். 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) கடியவை - தீவினை. அடிகள் என்றது விசயையை. அண்ணல் : சீவகன். மன்னன், சுட்டுப்பொருள் மேனின்றது. தேவி : விசயை. படிமம் - பதுமை. 
 | 
( 44 ) | 
 
 
|  2643 | 
காதல னல்லை நீயுங் காவல நினக்கி யாமு |   |  
|   | 
மேதில மென்று கண்டா யிருந்தது நங்கை யென்னத் |   |  
|   | 
தாதலர் தாம மார்ப னுரிமையுந் தானு மாதோ |   |  
|   | 
போதவிழ் கண்ணி யீர்த்துப் புனல்வரப் புலம்பி னானே. |   |  
|   | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) காவல - மன்னனே!; நீயும் காதலன் அல்லை - நீயும் எம்மால் விருப்பப்படுவாய் அல்லை; நினைக்கு யாமும் ஏதிலம் என்று - நினக்கு யாமும் சுற்றம் அல்லேம் என்று; நங்கை இருந்தது என்ன - விசயை உரையின்றியிருந்தது என்ன; தாது அலர் தாம மார்பன் - தேன் விரியும் மலர்மாலை மார்பனான சீவகன்; உரிமையும் தானும் போது அவிழ் கண்ணி ஈர்த்து - மனைவியருந் தானுமாக அரும்பலர்ந்த கண்ணியை இழுத்து; புனல்வரப் புலம்பினான் - கண்ணீர் வர அழுதான். 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) ”காதலன் அல்லைநீயும் காவல நினக்கு யாமும் ஏதிலம்” என்னுமளவும் பம்மை விசயையின் கருத்தைக்கொண்டு கூறியபடியாம். தாது - மகரந்தம். உரிமை - மனைவியர். மாதும் ஓவும் அசைகள். 
 | 
( 45 ) | 
 
 
|  2644 | 
ஏதில னாயி னாலு |   |  
|   | 
  மிறைவர்தம் மறத்தை நோக்கக் |   |  
|   | 
காதல னடிக ளென்னக் |   |  
|   | 
  கண்கனிந் துருகிக் காசின் |   |  
|   | 
மாதவ மகளி ரெல்லா |   |  
|   | 
  மாபெருந் தேவி யாரை |   |  
|   | 
யேதமொன் றில்லை நம்பிக் |   |  
|   | 
  கின்னுரை கொடுமி னென்றார். |   | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) அடிகள் - அடிகளே!; ஏதிலன் ஆயினாலும் இறைவர்தம் அறத்தை நோக்க - யான் தேவிக்குச் சுற்றம் அன்றேனும், இறைவர் அறத்தைத் துணிந்து நிற்கின்ற நிலையை 
 | 
  |