முத்தி இலம்பகம் |
1495 |
|
|
நோக்க; காதலன் என்ன - அதனாற் காதலிக்குந் தன்மையுடையேன் என்றுகூற; காசு இல் மாதவ மகளிர் எல்லாம் - குற்றம் அற்ற தவமகளிர் எல்லோரும்; கண்கனிந்து - கண்ணோட்டஞ் செய்து; உருகி - மனமுருகி; மாபெருந் தேவியாரை - விசயமா தேவியாரை நோக்கி; ஏதம் ஒன்று இல்லை - குற்றம் ஏதும் இல்லை; நம்பிக்கு இன்னுரை கொடுமின் என்றார் - சீவகற்கு இன்மொழி பகர்மின் என்றனர்.
|
|
(வி - ம்.) ஏதிலன் - அயலான். இறைவர் தம் அறம் - அருகனறம., இறைவனறம் எல்லோரிடத்தும் அன்பு கூரும்படி கூறுதலின் அடியேனையும் மகனென்னும் முறையுடன் கருதாது அருகனடி நெறிபற்றியொழுகும் ஒருவனென நினைத்துத் தாங்கள் அளித்தல் தவறன்றே என்றவாறு. தேவியாரை - என்றது விசயையை. ஏதம் - குற்றம்.
|
( 46 ) |
2645 |
திரைவள ரிப்பி யீன்ற | |
|
திருமணி யார மார்பின் | |
|
வரைவளர் சாந்த மார்ந்த | |
|
வைரக்குன் றனைய திண்டோள் | |
|
விரைவளர் கோதை வேலோய் | |
|
வேண்டிய வேண்டி னேமென் | |
|
றுரைவிளைத் துரைப்பக் காளை | |
|
யுள்ளகங் குளிர்ந்து சொன்னான். | |
|
(இ - ள்.) திரைவளர் இப்பி ஈன்ற திருமணி ஆரம் மார்பின் - கடலிற் கிடைத்த இப்பி பெற்றனவும் அழகிய மணிகளுடன் கலந்தனவும் ஆன முத்துமாலை அணிந்த மார்பினையும்; வரைவளர் சாந்தம் ஆர்ந்த - மலையில் வளர்ந்த சந்தனம் பொருந்திய; வைரக்குன்று அனைய திண்தோள் - வைர மலைபோன்ற திண்ணிய தோளினையும்; விரைவளர் கோதை வேலோய்!; - மணம் வளரும் மாலை யணிந்த வேலையும் உடையவனே!; வேண்டிய வேண்டினேம் என்று - நீ விரும்பியவற்றை யாமும் விரும்பினேம் என்று; உரைவிளைத்து உரைப்ப - உரையை வலிய எழுப்பிக் கூற, காளை உள்ளகம் குளிர்ந்து சொன்னான் - சீவகன் மனம் மகிழ்ந்து கூறினான்.
|
|
(வி - ம்.) 'வேண்டிய' என்ற பன்மை, 'உறைக' என்றதும், 'காதலன்' என்றதும்.
|
|
இப்பியீன்ற ஆரம், திருமணிஆரம் எனத் தனித்தனி கூட்டுக. திருமணி - மாணிக்கம். ஆரம் - முத்துமாலை - மாணிக்கம் கலந்த முத்து மாலை என்பது கருத்து. வரை - பொதியமலை என்க. விரை - நறுமணம.் வலிந்துரைப்ப என்பது தோன்ற உரைவிளைத்துரைப்ப என்றார்:
|
( 47 ) |