| முத்தி இலம்பகம் | 
1498  | 
 | 
 
  | 
 
| 
    (இ - ள்.) உருவப் பைம்பூண் பிறங்கு தார் மார்பன் - அழகியபூணினையும், விளங்குந்தாரையுமுடைய மார்பன்; துறந்த இந்நங்கைமார் தம் தூமலர் அனை பாதம் - துறவு பூண்ட இந்த அரிவையரின் தூய மலர்போன்ற அடிகள்; என்சென்னி உறைந்த போதின் மிசைய - என் முடியிலுள்ள மலர்களின் மேலன; என்று ஒப்ப ஏத்தி - என்று அவர்களின் தவவொழுக்கத்திற்குப் பொருந்த வாழ்த்தி; கறந்த பால் அனையகந்திக் கொம்பு அடுத்து - கறந்திட்ட பால்போலுந் தூய கந்தியாகிய கொம்பு இவர்களைப் புரக்குமாறு சேர்த்து; போந்து பெரு மணக்கோயில் புக்கான் - பள்ளியினிற்றும் திரும்ப வந்து பெரிய மணமுறும் அரண்மனையை அடர்ந்தான். 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) கறந்தபால், கந்தியின் தூய்மைக்குவமை. கந்தி - தவப்பெண். கந்தியாகிய கொம்பு என்க. உருவம் - அழகு. மார்பன் : சீவகன்; பள்ளியினின்றும் போந்தென்க. 
 | 
( 51 ) | 
 
 
|  2650 | 
வடிநிரை நெடிய கண்ணார் |   |  
|   | 
  மாமிமார் விடுப்ப வேகிக் |   |  
|   | 
கடிநிரை சிவிகை யேறிக் |   |  
|   | 
  கதிர்மணிக் குடைபின் செல்ல |   |  
|   | 
வுடைதிரைப் பரவை யன்ன |   |  
|   | 
  வொளிறுவேன் மறவர் காப்பக் |   |  
|   | 
கொடிநிரைக் கோயில் புக்கார் |   |  
|   | 
  குங்குமக் கொடிய னாரே. |   | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) குங்குமக் கொடியனார் வடிநிரை நெடிய கண்ணார் - குங்குமம் அணிந்த கொடிபோன்றவராகிய, மாவடுவின் வரிசைபோன்ற நீண்ட கண்ணார்; மாமிமார் விடுப்ப ஏகி - மாமியார் விடைதரத் தவப்பள்ளியினின்றும் போய்; கடிநிரை சிவிகை ஏறி - வரைவினையுடைய அணியான பல்லக்கில் ஏறி; கதிர்மணிக் குடை பின்செல்ல - ஒளியுறும் மணிக்குடைகள் பின்னே போதர; உடை திரைப் பரவை அன்ன ஒளிறு வாள் மறவர் காப்ப - முரிகின்ற அலைகளையுடைய கடல்போலும் அளவினராகிய, விளங்கும் வாளேந்திய மறவர்கள் காப்ப; கொடி நிரை கோயில் புக்கர் - கொடிகளையுடைய அரண்மனையை அடைந்தனர். 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) கடிச் சிவிகை - வரைவினையுடைய சிவிகை; என்றது, அரசனால் தேவியர் குலங்கட்கேற்ப இவ்வாறு செல்லற்குரியர் என்று முன் போதற்கும் பின் போதற்கும் வரையப்பட்ட சிவிகை என்றவாறு; 'ஏற்றற் கண்ணும் நிறுத்தற் கண்ணும் - உரிமை கொடுத்த கிழவோன் பாங்கில் - பெருமையில் திரியா அன்பின் கண்ணும்' (தொல் - கற்பு. 6 ) என்றார். 
 | 
( 52 ) |