பக்கம் எண் :

பதிகம் 15 

இரண்டு திங்கள் விரும்பி இருந்தபடியும்; கல்பாடு அழித்தகனம் மாமணித் தூண்செய் தோளான் - உலக்கல்லின் பெருமையைக் கெடுத்த கனத்த மணித்தூணைப் போன்ற தோளையுடைய அவன்; விரைவின் வெற்பு ஊடு அறுத்து நெறிக் கொண்ட ஆறும் - காரியத்தின் விரைவாலே மலையின் இடையிலே புகுந்து வழிக்கொண்டபடியும்;

 

   (வி - ம்.) உலகத்தின் பெருமையைக் கெடுத்த கனத்த மணித்தூணைப் போன்ற தோளான்.

( 14 )
20 தள்ளாத சும்மை மிகுதக்கந னாடு நண்ணி
விள்ளா விழுச்சீர் வணிகன்மகள் வேற்க ணோக்க
முள்ளாவி வாட்ட வுயிரொன்றொத் துறைந்த வாறுங்,
கள்ளாவி நாறுங் கமழ்கோதையிற் போய வாறும்,

   (இ - ள்.) தள்ளாத சும்மைமிகு நல்தக்க நாடு நண்ணி - இன்ன ஒலியென்று நீக்கமுடியாத ஆரவாரம் மிகுந்த அழகிய தக்க நாட்டை அணைந்து; விள்ளா விழுச்சீர் வணிகன் மகள் வேல் கண் நோக்கம் உளஆவி வாட்ட - நீங்காத சிறந்த புகழையுடைய ஒரு வணிகன் மகளின் வேலனைய கண்களின் பார்வை உயிரை மனத்துள்ளே நின்று வருத்தலால்; உயிர் ஒன்று ஒத்து உறைந்த ஆறும் - (இருவர்) உயிரும் ஓருயிரைப்போல வாழ்ந்த படியும்; கள் ஆவி நாறும் கமழ் கோதையின் போய ஆறும் - தேன் மணம் கமழும் அவளைப் பிரிந்து போனபடியும் ;

 

   (வி - ம்.) விள்ளா - நீங்காத; உள் - மனம். ஆவி - மணம், (கள்ஆவி) இன்: நீக்கம், (கோதை: சினையாகு பெயர்) கோதையின் : இன்: நீக்கம். தக்கநாடு: வடமொழிச் சிதைவு

( 15 )
21 இன்னீ ரமிர்தன் னவள் கண்ணிணை மாரி கற்பப்
பொன்னூர் கழலான் பொழிமாமழைக் காடு போகி
மின்னீர வெள்வே லவன்மத்திம தேய மன்னன்
கொன்னூர் கொடுவெஞ் சிலைகண்டெதிர் கொண்ட வாறும்,

   (இ - ள்.) இன்நீர் அமிர்து அன்னவள் கண்இணை மாரி கற்ப- இனிய பண்புறும் அமுதம்போன்ற கேமசரியின் இருகண்களும் மாறாது நீர்சொரியப் பழகும்படி ; பொன் ஊர் கழலான் மாமழை பொழி காடு போகி - பொன் நெகிழும் வீரக்கழலான் பெருமழை பெய்யுங் காட்டிடைப் போதலாலே; மின் நீர வெள் வேலவன் மத்திய தேய மன்னன் - மின்னின் தன்மையையுடைய தூய வேலேந்திய மத்திம நாட்டரசன் தடமித்தனென்பான்; கொன் ஊர் கொடு வெஞ்சிலை கண்டு எதிர்கொண்ட