நாமகள் இலம்பகம் |
150 |
|
(இ - ள்.) என்பு நெக்குஉருகி உள்ளம் ஒழுகுபு சோரயாத்த அன்புமிக்கு - என்பு நெகிழ்ந்துருகுமாறு உள்ளம் கலங்கிச் சோர்வுறப் பிணித்த அன்பு மிகுதலால்; அவலித்து ஆற்றா ஆருயிர்க் கிழத்தி தன்னை - அழுதல் அமையாத சிறந்த உயிர்போலுங் காதலியை; இன்பம் மிக்கு உடைய சீர்த்தி இறைவனது ஆணை கூறி - அளவற்ற இன்பம் மிகுதலாலே புகழைப் பெற்ற அருகப் பெருமானது ஆணைமொழியாகிய ”ஓம்ணமோ அரஹந்தாணம்” என்னும் பஞ்ச நமஸ்கார மந்திரம் ஒன்றனைக் கூறி; துணைவி தன்னைத் துன்பம்இல் பறவை ஊர்தி சேர்த்தினன் - துணைவியைத் துன்பமில்லாது செல்லுதற்குரிய மயிற்பொறியாகிய ஊர்தியிலே அமர்த்தினான்.
|
|
(வி - ம்.) [கூறி என்பதனைக் கூற எனத் திரித்து, ஆணைக் கூறியதை விசயைக்கு ஆக்குவர் நச்சினார்க்கினியர்.]
|
( 244 ) |
வேறு
|
|
274 |
நீரு டைக்கு வளையி |
|
னெடுங்க ணின்ற வெம்பனி |
|
வாரு டைம்மு லைம்முக |
|
நனைப்ப மாதர் சென்றபின் |
|
சீரு டைக்கு ருசிலுஞ் |
|
சிவந்த ழன்றொர் தீத்திரள் |
|
பாரு டைப்ப னிக்கடல் |
|
சுடுவ தொத்து லம்பினான். |
|
(இ - ள்.) நீருடைக் குவளையின் நெடுங்கண் நின்ற வெம்பனி - நீர் நீங்காத குவளைபோல, நீண்ட கண்களில் இருந்து வடியும் வெப்பமிகும் நீர்(மாறாது); வார்உடை முலைமுகம் நனைப்ப மாதர் சென்றபின் - கச்சை அறுக்கும் முலைமுகத்தை நனைத்திட விசயை நீங்கின பிறகு; சீர்உடை குருசிலும் சிவந்து அழன்று - சிறப்புற்ற வேந்தனும் உள்ளம் வெதும்பிச் சீற்றங்கொண்டு; ஓர் தீத்திரள் பார்உடை பனிக்கடல் சுடுவது ஒத்து உலம்பினான் - ஒப்பற்ற வடவைத்தீ, உலகை அகத்தில் அடக்கிப் பொங்கிய குளிர்ந்த கடலைச் சுடுவதுபோல முழங்கினான்.
|
|
(வி - ம்.) உடைம் முலை : மகரஒற்று வண்ணத்தால் வந்தது. பாரை அகத்து அடக்கின கடல் என்றது ஊழிக்காலத்து நீரை. தான் அமைத்த படையைத் தானே அழிப்பதை யுன்னி நெருப்பும் நீரும் உவமை கூறினார்.
|
( 245 ) |