பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1500 

   (வி - ம்.) உடைதிரை : வினைத்தொகை. ஓசனித்தல் - 'சிறகடித்தல்' என்பர் நச்சினார்க்கினியர். 'வெக்கையால் தலை எடுத்தல்' என்பர் சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர். போதற்கு ஒருப்பட்டு முயறல் என்று அடியார்க்கு நல்லார் உரைகூறி 'உடைதிரை முத்தஞ் சிந்த ஓசனிக்கின்ற அன்னம்' என்றார் சிந்தாமணியினும் என்று இத்தொடரை எடுத்துக் காட்டினர்.

( 54 )
2653 துறவின்பாற் படர்த லஞ்சித்
  தொத்தொளி முத்துத் தாம
முறைகின்ற வுருவக் கோலச்
  சிகழிகை மகளி ரின்பத்
திறைவனை மகிழ்ச்சி செய்து
  மயங்குவா னமைச்ச ரெண்ணி
நிறையநீர் வாவி சாந்தங்
  கலந்துடன் பூரித் தாரே.

   (இ - ள்.) துறவின்பால் படர்தல் அஞ்சி - (அரசன்) துறவிலே மனம் படர்தற்கு அஞ்சி; தொத்து ஒளி முத்துத்தாமம் - கொத்தாகிய ஒளியையுடைய முத்துமாலை; உறைகின்ற உருவக் கோலச் சிகழிகை - தங்கிய அழகிய ஒப்பனை நிறைந்த மயிர் முடியுடைய; மகளிர் இன்பத்து - மகளிரின் இப்பத்திலே; இறைவனை மகிழ்ச்சி செய்து மயக்குவான் - அவனைக் களிப்பூட்டி மயக்குதற்கு; அமைச்சர் எண்ணி - மந்திரிகள் ஆராய்ச்சி செய்து; நீர் வாவி நிறைய சாந்தம் உடன் கலந்து பூரித்தார் - நீர் வாவி நிறையச் சந்தனமும் உடன் கலந்து நிறைத்தார்.

   (வி - ம்.) இறைவன் துறவின்பால் படர்தல் அஞ்சி அவனை மயக்குவான் அமைச்சர் எண்ணிப் பூரித்தார் என்க. இன்பம் பிறத்தற்கு விளையாட்டும் நிலைக்களனாதலின் முதற்கண் நீர் விளையாட்டிற் சீவகனை ஈடுபடுத்த முய்னறார் என்பதாம்.

”செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று
அல்லல் நீத்த உவகை நான்கே”. (மெய்ப். - 11)

   என்பது தொல்காப்பியம். மகளிரின்பத்திற்கு நீர் விளையாட்டுக் கால் கோளுமாதலுணர்க.

( 55 )
2654 நீரணி மாட வாவி
  நோ்ம்புணை நிறைத்து நீணீர்ப்
போரணி மாலை சாந்தம்
  புனைமணிச் சிவிறி சுண்ணம்