| முத்தி இலம்பகம் |
1501 |
|
|
| 2654 |
வாரணி முலையி னார்க்கு | |
| |
மன்னற்கும் வகுத்து வாவி | |
| |
யேரணி கொண்ட விந்நீ | |
| |
ரிறைவகண் டருளு கென்றார். | |
| |
|
|
(இ - ள்.) மாட நீரணி வாவி - மாடத்தையுடைய (அந்த) நீரணி வாவியிலே; நேர்ம் புணை நிறைத்து - நொய்ய தெப்பங்களையும் நிறைத்து; நீள் நீர்ப்போர் அணி மாலை சாந்தம் புனை மணிச் சிவிறி சுண்ணம் - பெரிய நீர்ப் போருக்கு அழகிய மாலையும் சாந்தமும் மணிச் சிவிறியும் சுண்ணமும்; வார் அணி முலையினார்க்கும் மன்னற்கும் வகுத்து - வாரணிங்த முலை மகளிர்க்கும் வேந்தனுக்கும் என வகுத்து வைத்து; ஏர் அணி கொண்ட இந்நீர் வாவி - அழகிய ஒப்பனை கொண்ட இந்த நீர் வாவியை; இறைவ! கண்டருளுக என்றார் - அரசே! பார்த்தருள்க என்றனர்.
|
|
(வி - ம்.) நேர்ம்புணை என்புழி மகரம் வண்ண நோக்கித் தோன்றிற்று. நேர் - ஈண்டு நொய்மையின் மேனின்றது. இறைவ : விளி.
|
( 56 ) |
| 2655 |
கணமலை யரசன் மங்கை கட்டியங் கார னாகப் | |
| |
பணைமுலை மகளி ரெல்லாம் பவித்திரன் படைய தாக | |
| |
விணைமலர் மாலை சுண்ண மெரிமணிச் சிவிறி யேந்திப் | |
| |
புணைபுறந் தழுவித் தூநீர்ப் போர்த்தொழி றொடங்கி னாரே. | |
| |
|
|
(இ - ள்.) கணமலை அரசன் மங்கை கட்டியங்காரனாக - தொகுதியான மலைகளின் அரசன் மகளான காந்தருவதத்தை கட்டியங்காரனாகவும்; பணைமுலை மகளிர் எல்லாம் பவித்திரன்படையதாக - பருத்த முலைகளையுடைய மங்கையர் எல்லோரும் தூய மன்னனின் படையாகவும்; இணை மலர்மாலை சுண்ணம் எரிமணிச் சிவிறி ஏந்தி - இணைத்த மலர் மாலையும் சுண்ணமும் விளங்கும் மணிச் சிவிறி ஏந்தி; புணைபுறம் தழுவி - தெப்பத்தின் புறத்தைத் தழுவியவாறு : போர்த்தொழில் தொடங்கினார் - நீர் விளையாட்டைத் தொடங்கினார்.
|
|
(வி - ம்.) வேறொரு பகையரசைத் தாம் கேட்டறியாமையானும், கட்டியங்காரன் கொடுமை மனத்தே நிகழ்தலானும், 'கட்டியங்காரனாக' என்றார்.
|
( 57 ) |
| 2656 |
தூமலர் மாலை வாளாச் சுரும்பெழப் புடைத்துந் தேன்சோர் | |
| |
தாமரைச் சதங்கை மாலை சக்கர மென்ன வீழ்த்துங் | |
| |
காமரு கணைய மாகக் கண்ணிக ளொழுக விட்டுந் | |
| |
தோமர மாகத் தொங்கல் சிதறுபு மயங்கி னாரே. | |
| |
|