| முத்தி இலம்பகம் |
1503 |
|
|
| 2658 |
தேனின மிரியத் தெண்ணீர்க் | |
| |
குளித்தெழுந் திருவி னன்னார் | |
| |
பான்மிசை சொரியுந் திங்கள் | |
| |
பனிக்கடன் முளைத்த தொத்தார். | |
| |
|
|
(இ - ள்.) தையலார் - (நீரில் மூழ்கிய) அம்மங்கையர்; ததும்ப - (தடத்து நீர்) அலைவதால்; தானக மாடம் ஏறி - (அங்கு மறைந்திருக்க மாட்டாராய்) அங்குள்ள நிர் மாடங்களில் ஏறி; பாய்வார் - திரும்ப நீரிற் பாய்வாராகிய மகளிர்; வானகத்து இழியும் தோகை மடமயில் குழாங்கள் ஓத்தார் - வானிலிருந்து இறங்கும் தோகையையுடைய இளமயில்களின் திரளைப் போன்றனர்; தேன் இனம் இரியத் தெண்ணீர் குளித்து எழும் திருவின் அன்னார் - வண்டினம் ஓடத் தெளிந்த நீரிலே முழுகி எழும் திருமகளைப் போன்றவர்கள்; மிசை பால் சொரியும் திங்கள் படுகடல் முளைத்தது ஒத்தார் - வானிலிருந்து பால்போல் நிலவைப் பொழியும் திங்கள் தான் உண்டாகும் கடலிலே தோன்றியது போன்றனர்.
|
|
(வி - ம்.) ”தன்னகமாடம் : விகாரம்; நீரகத்துச் செய்த பல நிலங்களையுடைய மாடம்” என்பர் நச்சினார்க்கினியர். தானக மாடம் - ஒருவகை நீர்மாடம். ”தானக மாடமொடு தலைமணந்தோங்கிய” என்றார் கதையினும் (1, 38 : 81). மாடத்தினின்று மிழியும் மகளிர்க்கு வானத்தினின்றிழியும் மயிற்குழாமும் முழுகியிருந்து எழும் மகளிர் முகத்திற்குக் கடலில் எழுந்திங்கள் மண்டிலமும் உவமைகள்.
|
( 60 ) |
| 2659 |
கண்ணிகொண் டெறிய வஞ்சிக் | |
| |
காறளர்ந் தசைந்து சோர்வார் | |
| |
சுண்ணமுஞ் சாந்தும் வீழத் | |
| |
தொழுதன ரிரந்து நிற்பா | |
| |
ரொண்மலர் மாலை யோச்ச | |
| |
வொசிந்துகண் பிறழ வொல்கி | |
| |
வெண்ணெயிற் குழைந்து நிற்பார் | |
| |
வேற்கணா ராயி னாரே. | |
|
|
(இ - ள்.) கண்ணிகொண்டு எறிய - கண்ணிகொண்டு இவ்வாறு எறிந்ததனால்; வேல் கணார் - வேலனைய கண்ணினர்; அஞ்சிக் கால் தளர்ந்து அசைந்து சோர்வார் - அச்சுற்று நின்ற நிலைகுலைந்து இளைத்துச் சோர்வார் : சுண்ணமும் சாந்தமும் வீழத் தொழுதனர் இரந்து நிற்பார் - சுண்ணப் பொடியும் சந்தனமும் கைசோரத் தொழுது வேண்டி நிற்பார்; ஒண்மலர் மாலை ஓச்ச - சிறந்த மலர்மாலையை ஓச்ச; ஒசிந்து கண் பிறழ ஒல்கி - முரிந்து.
|