| முத்தி இலம்பகம் |
1506 |
|
|
| 2663 |
பெண்ணுரைப் பிடிக்கைக் கூந்தற் | |
| |
பொன்னரி மாலை தாழ | |
| |
வெண்ணுரை யுடுத்து நின்றார் | |
| |
வேந்தனோக் குண்ண நின்றார். | |
| |
|
|
(இ - ள்.) பண் உரை மகளிர் மாலை பைந்துகில் கவர்ந்து கொள்ள - பண்போலும் உரையினையுடைய (அரசன் படையினராகிய) மகளிர், மாலையையும், துகிலையும் கவர்ந்து கொண்டதனாலே; கண் உரை மகளிர் - கண்ணால் அரசனுக்கு வருத்தத்தை யுண்டாக்கும் மகளிராகிய, தத்தையின் படையினர்; சோர்ந்து - சோர்வுற்று; கார் இருள் திவளும் மின்போல் - கரிய இருளிலே நுடங்கும் மின்னுக் கொடிபோல; பெண் உரை - பெண்களுக்கு உவமையாகக் கூறப்படும்; பிடிக்கைக் கூந்தல் - பிடியின் கை போலும் பின்னின கூந்தலிலே; பொன் அரி மாலை தாழ - பொன் மாலை தாழச் (சோர்ந்து), வெண் நுரை உடுத்து நின்றார் - வெள்ளிய நுரையை உடுத்து நின்றவராய்; வேந்தன் நோக்கு உண்ண நின்றார் - அரசன் தமது அழகை நுகர நின்றனர்.
|
|
(வி - ம்.) 'பெண்உரை ' என்பதற்குத் 'தம் பெண்மையைப் பலருக்குங் கூற' என்றும் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்.
|
|
தமக்குத் தோற்றமை தோன்றத் துகிலைக் கவர்ந்தார்.
|
|
பண்ணுரை - பண்போன்ற இன்மொழி. மாலையையும் துகிலையும் என்க. கண்ணாலுரைக்கு மகளர் என்க.
|
( 65 ) |
| 2664 |
தன்படை யுடையத் தத்தை | |
| |
சந்தனத் தாரை வீக்கி | |
| |
யொன்பது முகத்தி னோடி | |
| |
யுறுவலி யகலம் பாயப் | |
| |
பொன்படு சுணங்கு போர்த்த | |
| |
பொங்கிள முலையிற் றூவான் | |
| |
முன்படு குலிகத் தாரை | |
| |
முழுவலி முறுக்க லுற்றான். | |
|
|
(இ - ள்.) தன் படை உடைய - தன் படை தோற்றதனால்; தத்தை - தத்தையானவள்; சந்தனத் தாரை வீக்கி - சந்தனத் தாரையை வீக்க; ஒன்பது முகத்தின் ஓடி - அஃது ஒன்பது முகமாக ஓடி; உறுவலி அகலம் பாய - சீவகன் மார்பிலே பாய்தலால்; பொன் படு சுணங்கு போர்த்த பொங்கு இளமுலையில் தூவான் - பொன் போன்ற தேமல் படர்ந்த ததும்பும் இளமுலையிலே தூவானாகி; முன்பு அடு குலிகத்தாரை - தத்தையின்
|