| முத்தி இலம்பகம் | 
1507  | 
 | 
  | 
| 
 வலியை அடுகின்ற சிவந்த குலிகத்தாரையை; முழுவலி முறுக்கல் உற்றான் - முழுவலியுடன் தாக்கத் தொடங்கினான். 
 | 
| 
    (வி - ம்.) உடைய - தோற்ப, தத்தை : காந்தருவதத்தை. உறு வலி : சீவகன். அகலம் - மார்பு. சுணங்கு - தேமல். முழுவலி : அன்மொழித் தொகையுமாம். 
 | 
( 66 ) | 
|  2665 | 
மெய்ப்படு தாரை வீழி |   |  
|   | 
  னோமிவட் கென்ன வஞ்சிக் |   |  
|   | 
கைப்படை மன்ன னிற்பக் |   |  
|   | 
  கதுப்பயன் மாலை வாங்கிச் |   |  
|   | 
செப்பட முன்கை யாப்பத் |   |  
|   | 
  திருமகன் றொலைந்து நின்றான் |   |  
|   | 
பைப்புடை யல்கு லாளைப் |   |  
|   | 
  பாழியாற் படுக்க லுற்றே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) மெய்ப்படு தாரை வீழின் இவட்கு நோம் என்ன அஞ்சி - மெய்யிற்படும் நீர்த்தாரை பட்டால் இவட்கு நோகும் என அஞ்சியவனாய்; கைப்படை மன்னன் நிற்ப - கைப்படையாகிய சிவிறியுடன் வேந்தன் நிற்க; கதுப்பு அயல் மாலை வாங்கி - கூந்தலில் உள்ள மாலையை எடுத்து; செப்பட முன்கையாப்ப - (அரசனுடைய) செவ்விய முன்கையைப் பிணிக்க; பைப்புடை அல்குலாளைப் பாழியால் படுக்கல் உற்று - பாம்புப் படத்தின் பக்கம் போன்ற அல்குலுடையாளை, வலிமையாற் கைப்படுக்க முயன்று; திருமகன் தொலைந்து நின்றான் - சீவகன் தோல்வியுற்று நின்றான். 
 | 
| 
    (வி - ம்.) முலைமேற் படின் நோமென்றஞ்சி, மேய்யின்கண் வீச நின்றவன் மெய்யும் நோம் என அஞ்சினான். ஆகவே, தோற்றதாகக் கருதித் தத்தை மலர் மாலையால் அவன் கையைப் பிணித்தாள். 
 | 
( 67 ) | 
|  2666 | 
அடுத்தசாந் தலங்கல் சுண்ண |   |  
|   | 
  மரும்புனல் கவர வஞ்சி |   |  
|   | 
யுடுத்தபட் டொளிப்ப வொண்பொன் |   |  
|   | 
  மேகலை யொன்றும் பேசா |   |  
|   | 
கிடப்பமற் றரச னோக்கிக் |   |  
|   | 
  கெட்டதுன் றுகின்மற் றென்ன |   |  
|   | 
மடத்தகை நாணிப் புல்லி |   |  
|   | 
  மின்னுச்சோ் பருதி யொத்தான். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அடுத்த சாந்து அலங்கல் சுண்ணம் அரும்புனல் கவர - மெய்யிற் பூசிய சாந்தையும் சுண்ணப் பொடியையும் 
 |