பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 151 

275 முழைமு கத்தி டியரி
  வளைத்த வன்ன மள்ளரிற்
குழைமு கப்பு ரிசையுட்
  குருசி றான கப்பட
விழைமு கத்தெ றிபடை
  யிலங்கு வாட்க டலிடை
மழைமு கத்த குஞ்சரம்
  வாரி யுள்வ ளைந்ததே.

   (இ - ள்.) முழைமுகத்து இடிஅரி வளைத்த அன்ன - மலையின் குகையிலுள்ள இடியென முழங்கும் சிங்கத்தை வளைத்த யானைத் திரள்போன்ற; மள்ளரில் குழைமுகப் புரிசையுள் குருசில்தான் அகப்பட - வீரர்களிடையே, மகளிர் காக்கும் மதிலில் அரசன் அகப்படுமாறு; இழை முகத்து எறிபடை இலங்கு வாள் கடலிடை - நூல் பிளக்க எறியும் வேற்படை விளங்கும் வாள் வீரராகிய கடலின் நடுவே; மழைமுகத்த குஞ்சரம் வாரியுள் வளைந்த - முகில்போல மதம் ஒழுகும் களிறுகள் (யானை குதிரைகளின்மேல் அமர்ந்து பந்து விளையாடும்) செண்டுவெளியிலே வளைந்தன.

 

   (வி - ம்.) குழைமுக மகளிர் காக்கும் புரிசையெனவே அந்தப்புரம் ஆயிற்று; ‘ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின்‘ (நெடுநல். 107) என்றார் பிறரும். மழை - மதம்.

 

   அரியை யானை வளைத்தல் இல் பொருளுவமம்.

( 246 )
276 அயிலி னிற்பு னைந்தவா
  ளழன்று ருத்து உரீஇயுடன்
பயில்க திர்ப்ப ருமணிப்
  பன்ம யிர்ச்செய் கேடகம்
வெயிலே னத்தி ரித்துவிண்
  வழுக்கி வந்து வீழ்ந்ததோர்
கயில ணிக்க திர்நகைக்
  கடவு ளொத்து லம்பினான்.

   (இ - ள்.) அயிலினில் புனைந்த வாள் அழன்று உருத்து உெரீஇ - கூர்மையாக அமைத்த வாளை நெஞ்சு புகைந்து சினந்து (உறையினின்றும்) உருவி; உடன்பயில் கதிர்ப் பருமணிப் பன்மயிர்செய் கேடகம் வெயில் எனத் திரிந்து -அதனுடன் ஒளி தவழும் பெரிய மணிகளிழைத்துக் கரடித் தோலாற் செய்யப் பெற்ற கேடகத்தை ஞாயிறெனச் சுழற்றி; விண்வழுக்கி வந்து