முத்தி இலம்பகம் |
1511 |
|
|
2673 |
இழிந்து கீழ்நிலை யின்னகிற் சேக்கைமேற் | |
|
கிழிந்து சாந்தழி யக்கிளர் மென்முலை | |
|
தொழிந்து மட்டொழு கத்துதை தார்பொர | |
|
வழிந்த மேகலை யஞ்சிலம் பார்த்தவே. | |
|
|
(இ - ள்.) கீழ்நிலை இழிந்து - (மழை பெய்தலாற்) கீழ் நிலையிலே இறங்கி; இன் அகில் சேக்கைமேல் - இனிய அகில் மணங் கமழும் பள்ளியிலே; கிளர் மென்முலை சாந்து அழிய - விளங்கும் மென்முலையிலுள்ள சாந்து அழியவும்; கிழிந்து தொழிந்து மட்டு ஒழுகத் துதைதார் பொர - மலர் கிழிந்து சிதறித் தேன் ஒழுகும்படி அரசனுடைய நெருங்கிய தூசிப் படை பொருதலாலே; மேகலை அழிந்த - அவர்களுடைய மேகலைகளும் பொருதழிந்தன; அம் சிலம்பு ஆர்த்த - (அதுகண்டு) அழகிய சிலம்புகள் ஆர்த்தன.
|
(வி - ம்.) தொழிந்துதொழித்து என்பதன் விகாரம். தொழித்து - சிதறி. தார் என்றதற் கேற்பப் பொருதல் கூறினார். தார் - மாலை; தூசிப் படை. மகளிர் தொழிலால் மேகலையும் தலைவன் தொழிலால் சிலம்பும் ஆர்த்தன
|
( 75 ) |
2674 |
தேனி றாலன தீஞ்சுவை யின்னடை | |
|
யான றாமுலைப் பாலமு தல்லதொன் | |
|
றானு மேவல ரச்சுற வெய்திய | |
|
மான றாமட நோக்கிய ரென்பவே. | |
|
|
(இ - ள்.) தேன் இறால் அன தீசுவை இன் அடை - தேன் அடைபோன்ற இனிய சுவையை உடைய அடையும்; ஆன் அறா முலைப்பால் அழுது - ஆவினிடம் எப்போதும் கிடைக்கும் முலைப்பால் கலந்த சோறும்; அல்லது - அல்லாமல்; அச்சுறவு எய்திய மான் அறா மடநோக்கியர் - அஞ்சுதல் பொருந்திய மானின் நோக்கம் நீங்காத மடநோக்கியரான மங்கையர்; ஒன்றானும் மேவலர் - அவிழ் பதம் ஒன்றாயினும் விரும்பிலர்.
|
(வி - ம்.) தேனிறால் - தேனடை, இன்னடை என்றது பண்ணிகாரத்தை. இறால் புரையும் மெல்லடை என்றார் மதுரைக் காஞ்சியினும் (624) ”வடிவினாலும் மென்மையாலும் இனிமையாலும் இறாலையொத்த அடை. எந்நாளும் பாலறாத ஆனினது முலையிற் பாலமுதம்; என்றது சினை மேலும் கறக்கும் பசுவெனப் பசுவினது விசேடங் கூறிற்று. அமுதென்றதனால் 'பசுவினது முதுகொற்றிப் பாலே காமநுகர்வார்க் குறித்து' என நூலிற் கூறியவாறே கூறினார்” என்பர் நச்சினார்க்கினியர். அச்சுறவு - அஞ்சுதல். பாலும் தேனும் கலப்பால் இன்சுவைத்தென்பது ”பாலோடு தேன்கலந்தற்றே” என்னும் பொதுமறையான் உணர்க.
|
( 76 ) |