முத்தி இலம்பகம் |
1518 |
|
|
2689 |
ஏச்செயாச் சிலைநுத லேழை மார்முலைத் | |
|
தூச்செயாக் குங்குமந் துதைந்த வண்டினம் | |
|
வாய்ச்சியா லிட்டிகை செத்து மாந்தர்தம் | |
|
பூச்செயா மேனிபோற் பொலிந்து தோன்றுமே. | |
|
|
(இ - ள்.) ஏச் செயாச் சிலைநுதல் ஏழைமார் - அம்பை ஏவும் தொழிலைச் செய்யாத வில்போலும் நுதலையுடைய மங்கையரின்; முலைத் தூச்செயாக் குங்குமம் துதைந்த வண்டினம் - முலையிலுள்ள கழுவாத குங்குமத்திலே படிந்த வண்டின் திரள்; வாய்ச்சியால் இட்டிகை செத்தும் மாந்தர்தம் - வாய்ச்சி எனுங் கருவியாலே செங்கல்லைச் செத்தும் மக்களின்; பூச்செயாமேனிபோல் பொலிந்து தோன்றும் - கழுவாத உடம்பைப்போல விளக்கித் தோன்றும்.
|
(வி - ம்.) 'வண்டினம் படிதற்குக் காரணமான குங்குமம் மேனி போல் தோன்றும்' என்றும் கூட்டி உரைப்பர் நச்சினார்க்கினியர்.
|
ஏ - எய்தற்றொழில். ஏத்தொழில் செய்தற்கு ஏறிட்டும் அத்தொழில் செய்யாத விற்போலும் நுதல். வாய்ச்சி - ஒரு கருவி. இட்டிகை - செங்கல். பூச்செயா - கழுவாத.
|
( 91 ) |
இளவேனில்
|
வேறு
|
2690 |
குரவம் பாவை கொப்புளித்துக் | |
|
குளிர்சங் கீர்ந்த துகளேபோன் | |
|
மரவம் பாவை வயிறாரப் | |
|
பருகி வாடை யதுநடப்ப | |
|
விரவித் தென்றல் விடுதூதா | |
|
வேனி லாற்கு விருந்தேந்தி | |
|
வரவு நோக்கி வயாமரங்க | |
|
ளிலையூழ்த் திணா¦ன் றலர்ந்தனவே. | |
|
(இ - ள்.) குளிர்சங்கு ஈர்ந்த துகளேபோல் - குளிர்ந்த சங்கினை அறுத்த தூசிபோல; குரவம் பாவை பொப்புளித்து - குரவு ஈன்ற தேனைக் கொப்புளித்து; மரவம் பாவை வயிறு ஆரப்பருகி - மரவம் தந்த தேனை வயிறு நிறையப் பருகி ; வாடை நடப்ப - வாடை போகாநிற்க; விரவித் தென்றல் விடுதூதுஆ - வாடையுடன் கலந்த தென்றலை விடுகின்ற தூதாகக் கொண்டு; வேனிலாற்கு விருந்து ஏந்தி - காமனுக்கு இடுகின்ற விருந்தை ஏந்தி; வரவு நோக்கி - அவன் வரவை எதிர்பார்த்து; இலை
|