முத்தி இலம்பகம் |
1519 |
|
|
யூழ்த்து வயாமரங்கள் - அதனாலே இலையை உதிர்த்து வயா நோய்கொண்ட மரங்கள்; இணர்ஈன்று அலர்ந்தன - மலர்க்கொத்துக்களை ஈன்று மலர்ந்தன.
|
(வி - ம்.) வாடை தொடங்கின காலத்தே குரவம் பூத்தலின், அத் தேனைப் பல்காலும் உண்டு தெவிட்டினமை தோன்றக், 'கொப்புளித்து' என்றார். கொப்புளித்தல் - காற்றுச் சிதற அடித்தல். பாவை இரண்டும் உவமையாகுபெயர். வாடை கழிகின்ற காலத்தே மரவம் பூத்த புதுமைபற்றி, 'வயிறாரப் பருகி' என்றார் இதனாற் காற்று மிகச்சிதற அடியாமை கூறிற்று. 'தென்றல் வரவி' என்றார் தென்றல் வாடை போகாநிற்க விரவி வருகின்ற வரவைக் குறித்து. வாடையது : அது : பகுதிப் பொருள் விகுதி. நச்சினார்க்கினியர் 'அது' என்னும் சொல்லைப் பிரிந்து 'அது விடுதூதா' என இயைத்துத் தென்றலைச் சுட்டுகின்றதென்பர். ஏந்தி - மேற்கொண்டு.
|
மேலும் நச்சினார்க்கினியர் விளக்கம்:-
|
இதனால் வாடையும் தென்றலும் முன்னர் விரவித்தென்றல் பின்பு முதிர்ந்ததென்றார். கொய்புனத்துப் பருகி என்பனவும், 'வயாமரம்' என்பதூஉம், மாற்றருஞ் சிறப்பின் மரபன்றி, வழக்கின்கண் அடிப்பட்டு செய்யுளின்பம்பட வந்த மரபென்று மரபியலிற் பாதுகாத்தாம்.
|
( 92 ) |
2691 |
இளிவாய்ப் பிரசம் யாழாக | |
|
விருங்கட் டும்பி குழலாகக் | |
|
களிவாய்க் குயில்கண் முழவாகக் | |
|
கடிபூம் பொழில்க ளரங்காகத் | |
|
தளிர்போன் மடவார்தணந்தார்தந் | |
|
தடந்தோள் வளையு மாமையும் | |
|
விளியாக் கொண்டிங் கிளவேனில் | |
|
விருந்தா வாட றொடக்கினான். | |
|
(இ - ள்.) இளிவாய்ப் பிரசம் யாழாக - இளி என்னும் பண்ணையிசைக்கும் வண்டு யாழாகவும்; இருங்கண் தும்பி குழல் ஆக - கரிய கண்களையுடைய தும்பி குழல் ஆகவும்; களிவாய்க் குயில்கள் முழவு ஆக - களிப்பையுடைய குயில்கள் முழவாகவும்; கடிபூம் பொழில்கள் அரங்கு ஆக - மணமுறும் மலர்ப் பொழில்கள் அரங்காகவும்; தளிர்போல் மடவார் - தளிரனைய மேனியையுடைய மங்கையரில்; தணந்தார்தம் - கணவரைப் பிரிந்தவர்களின்; தடத்தோள் வளையும் மாமையும் - பெரிய தோளிலிருந்து வளை கழன்றபடியும் மாமைநிறங் கெட்டபடியும்; விளியாகக் கொண்டு - (கணவருணரத் தூது சென்ற பாணன் யாழ்மேல் வைத்துப் பாடும் பாட்டைப்) பாட்டாகக் கொண்டு; இங்கு இளவேனில் விந்தா ஆடல் தொடங்கினான் - இப்போது இளவேனில் புதியதாக ஆடலைத் தொடங்கினான்.
|