நாமகள் இலம்பகம் |
152 |
|
வீழ்ந்தது கயில்அணிக் கதிர்நகை ஓர் கடவுள் ஒத்து உலம்பினான் - வானிலிருந்து வழுக்கிவந்து வீழ்ந்ததாகிய கதிராகிய மூட்டுவாய் அமைந்த முத்துமாலையையுடைய ஒரு கடவுளைப் போல முழங்கினான்.
|
|
(வி - ம்.) நல்வினை கெட்டு வீழ்ந்ததொரு கடவுள் (ஞாயிறு) உவமையாயிற்று, இவனும் துணையும் படையுமின்றி நிற்றலின். கயில் - மூட்டுவாய். நகை - முத்துவடம்.
|
( 247 ) |
277 |
மாரி யிற்க டுங்கணை |
|
சொரிந்து மள்ள ரார்த்தபின் |
|
வீரி யக்கு ருசிலும் |
|
விலக்கி வெங்க ணைமழை |
|
வாரி யிற்க டிந்துட |
|
னகற்ற மற்ற வன்படைப் |
|
பேரி யற்பெ ருங்களிறு |
|
பின்னி வந்த டைந்தவே. |
|
(இ - ள்.) மள்ளர் மாரியின் கடுங்கணை சொரிந்து ஆர்த்த பின் - வீரர்கள் மழையெனக் கொடிய அம்புகளைப் பொழிந்து ஆரவாரித்த பிறகு; வீரியக் குருசிலும் வெங்கணை மழை விலக்கி - வீரம் மிகுந்த அரசனும் கொடிய அக் கணைமழையை நீக்கி; வாரியில் உடன் கடிந்து அகற்ற - செண்டு வெளியில் நின்று அப்படைகளைச் சேரக் கெடுத்துப் போக்க; மற்றவன் படைப்பேர் இயல் பெருங்களிறு பின்னி வந்து அடைந்த -வேறாக நின்ற வலிய படையிலுள்ள புகழ்பெற்ற பெரிய களிறுகள் நெருங்கி வந்து குழுமின.
|
|
(வி - ம்.) பேர்இயல் பெருங்களிறு - தம்பேர் உலகில் இயலுதலையுடைய பெரிய களிறுகள்.
|
( 248 ) |
278 |
சீற்ற மிக்க மன்னவன் |
|
சோ்ந்த குஞ்ச ரந்நுதற் |
|
கூற்ற ருங்கு ருதிவாள் |
|
கோடு றவ ழுத்தலி |
|
னூற்று டைநெ டுவரை |
|
யுருமு டன்றி டித்தென |
|
மாற்ற ரும்ம தக்களிறு |
|
மத்த கம்பி ளந்தவே. |
|