முத்தி இலம்பகம் |
1520 |
|
|
(வி - ம்.) இளி - இளியென்னும் நரம்பு. ”நிலம்பெயர்ந் துறைதல் வரைநிலை யுரைத்தல் - கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய' (தொல். கற்பு. 24) என்பதனாற் கணவரைப் பிரிந்த மகளிரின் மெலிவைப் பாட்டாகக் கொண்டு பாணன் அம் மகளிரின் கணவரிடம் பாடுதல் கொள்க. 'விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும்' (திரி.11) என்றார் பிறரும்.
|
( 93 ) |
2692 |
வேனி லாடும் விருப்பினால் | |
|
வியன்காய் நெல்லிச் சாந்தரைத்து | |
|
நான வெண்ணெய் கதுப்புரைத்து | |
|
நறுநீ ராடி யமிர்துயிர்க்குந் | |
|
தேனா ரகிலின் புகைசோ்த்தி | |
|
வகுத்து நாவிக் குழம்புறீஇ | |
|
யானாப் பளித நறுஞ்சுண்ண | |
|
முகிரி னுழுதாங் கணிந்தாரே. | |
|
(இ - ள்.) வேனில் ஆடும் விருப்பினால் - வேனிலில் விளையாடும் விருப்பதினால்; வியன்காய் நெல்லிச் சாந்து அரைத்து- பெரிய நெல்லிக்காயைச் சாந்தாக அரைத்துக்கொண்டு; நான் எண்ணெய் கதுப்பு உரைத்து - கத்தூரி கலந்த எண்ணெயைக் கூந்தலிலே தேய்த்து; நறுநீராடி - (அச் சாந்தைக் கொண்டு) நல்ல நீரிலே குளித்து; அமிர்து உயிர்க்கும் தேன்ஆர் அகிலின் புகைசேர்த்தி - அமிர்தம் துளிக்கும் தேன் நிறைந்த அகிற்புகையைச் சேர்த்தி; வகுத்து - வகிர்ந்து; நாவிக் குழம்பு உறீஇ - புழுகைத் தடவி; உகிரின் உழுது - நகத்தாலே நீக்கி; ஆனாப் பளித நறுஞ்சுண்ணம் அணிந்தார் - குறைவில்லா நல்ல கருப்பூரப் பொடியை அணிந்தார்.
|
(வி - ம்.) வேனில் - வேனிற்காலம். நெல்லிக்காய்ச் சாந்து அரைத்து என்க. நானம் - கத்தூரி. கதுப்பு - கூந்தல். நாவிக்குழம்பு - புழுகுச் சாந்து. பளிதம் - கருப்பூரம். உகிர் - நகம்
|
( 94 ) |
2693 |
முத்தார் மருப்பி னிடைவளைத்த | |
|
முரண்கொள் யானைத் தடக்கையி | |
|
னொத்தே ருடைய மல்லிகையி | |
|
னொலியன் மாலை யுறுப்படக்கி | |
|
வைத்தார் மணிநூற் றனவைம்பால் | |
|
வளைய முடித்து வான்கழுநீ | |
|
ருய்த்தாங் கதனுட் கொளவழுத்திக் | |
|
குவளைச் செவித்தா துறுத்தாரே. | |
|