முத்தி இலம்பகம் |
1521 |
|
|
(இ - ள்.) முத்து ஆர் மருப்பினிடை வளைத்த முரண்கொள் யானைத் தடக்கையின் - முத்து நிறைந்த கொம்பினிடையே வளைத்த வலிமை கொண்ட யானையின் துதிக்கையினை; ஒத்து ஏருடைய மல்லிகையின் ஒலியல் மாலை உறுப்பு அடக்கி வைத்தார் - ஒப்புக்கொண்டு அழகுடையனவாகிய மல்லிகையாற் கட்டின மாலையை அடக்கி அதனருகே உறுப்பு மாலையையும் முன்பனிக்காலத்தே வைத்த மங்கையர்; மணி நூற்றன ஐம்பால் வளைய முடித்து - (இவ்விளவேனியிலே) நீல மணியை நூலாக்கினாற் போன்ற கூந்தலைத் திரள முடித்து; வான்கழுநீர் உய்த்து - சிறந்த கழுநீர் மாலையை அதனுட் செலுத்தி; ஆங்கு அதனுள் கொள அழுத்தி - அங்கே அதனுள்ளே கொள்ள அழுத்தி; குவளைச் செவித்தாது உறுத்தார் - குவளையினது செவ்வி பொருந்திய தாதையும் உறுத்தினார்.
|
(வி - ம்.) மருப்பு - கொம்பு. முரண் - வலிமை. ஏர் - அழகு. ஒலியன் மாலை - உறுப்புமாலை என மாறுக. மணி - நீலமணி. ஐம்பால் - கூந்தல். கழுநீர்: ஆகுபெயர். செவ்வி - செவி என விகாரமெய்தியது.
|
( 95 ) |
2694 |
புகையார் வண்ணப் பட்டுடுத்துப் | |
|
பொன்னங் கலைகள் புறஞ்சூழ்ந்து | |
|
நகையார் கவுள கிண்கிணியுஞ் | |
|
சிலம்பு நாய்நாச் சீறடிமேற் | |
|
பகைகொண் டார்போற் சுமாஅய்க்கண்பின் | |
|
பரூஉக்காம் பனைய கணைக் கால் சூழ்ந் | |
|
தகையார்ந் திலக்கும் பரியகந் | |
|
தாமே கவினச் சோ்த்தினார். | |
|
(இ - ள்.) பகை கொண்டார்போல் - பகைவரைப்போல; புகைஆர் வண்ணப் பட்டு உடுத்து - அகிற்புகை ஊட்டின அழகிய பட்டை (இடைக்குச் சுமையாக்) உடுத்து; பொன் அம் கலைகள் புறம் சூழ்ந்து - பொன்னாலாகிய அழகிய மேகலைகளை அப் பட்டின்மேல் வளைத்து; நகை ஆர் கவுள கிண்கிணியும் சிலம்பும் - ஒளிபொருந்திய கதுப்பினையுடைய கிண்கிணியையும் சிலம்பையும்; நாய்நாச் சீறடிமேல் சுமாய் - நாயின் நாவைப் போன்ற சிற்றடியின்மேற் சுமத்தி; கிண்பின் பரூஉக் காம்பு அனைய கணைக்கால் சூழ்ந்து - கணுக்களுக்குப் பின்னேயுள்ள (கணுக்களின் இடையே உள்ள) பெரிய காம்பு போன்ற கணைக் காலின்மேல் சூழ்ந்து; அகை ஆர்ந்த இலக்கும் பரியகம் தாமே கவினச் சேர்ந்தினார் - கூறுபாடு நிறைந்து விளங்கும் பரியகம் என்னும் அணியை அழகுறச் சேர்த்தினார்.
|