முத்தி இலம்பகம் |
1523 |
|
|
(இ - ள்.) கோல் முன்கை - திரண்ட முன்கையிடத்து; காந்தள் குவிவிரல்மேல் - காந்தளையொத்த குவிந்த விரலின்மேல்; பெரிய குழிய - கேவணம் குழிந்திருத்தலின்; மணி ஆர் - மணிகள் பொருந்திய; கழியப் பெரிய அருவிலைய - மிகவும் பெருமையுற்ற அரிய விலையையுடைய; சிறிய மணி மோதிரம் கனல் - சிறிய அழகிய மோதிரம் ஒளி வீச; பெரிய தடம் மென்தோள் தழிய சலாகைமின்ன - பெரிய மெல்லிய தோளிலே தழுவச் சலாகை மின்னும்படி; விழிகண் மகர குண்டலமும் தோடும் - விழித்த கண்ணையுடைய மகரமீன் வடிவான குண்டலமும் தோடும்; காதில் மிளிர்ந்தன - காதிலே விளங்கின.
|
(வி - ம்.) மகரத்திற்குங் குண்டலத்திற்கும் இடையில் ஓட்டின சலாகை மின்னாநிற்கத் தோளிலே தாழ்ந்திலங்குங் குண்டலம். இனி, சலாகை வாகுவலயம் என்பாருமுளர்.
|
நச்சினார்கினியர் சொற்களைக் கொண்டு கூட்டிக் கூறும் பொருள்: ”திரண்ட முன்கையிடத்துக் காந்தளையொத்த விரல்மேலே சிறிய மணிமோதிரம் கனலப் பெரிய தோளிலே கேவணம் குழிந் திருத்தலின் கழியப் பெரிய மணிகளார்ந்த அருவிலையையுடைய அணிகலம் தழுவக் காதிலே மகரகுண்டலமும் தோடும் மிளிர்ந்தன.”
|
( 98 ) |
2697 |
நாணுள் ளிட்டுச் சுடர்வீசு | |
|
நன்மா ணிக்க நகுதாலி | |
|
பேணி நல்லார் கழுத்தணிந்து | |
|
பெருங்கண் கருமை விருந்தூட்டி | |
|
நீணீர் முத்த நிரைமுறுவல் | |
|
கடுச்சுட் டுரிஞ்சக் கதிருமிழ்ந்து | |
|
தோணீர்க் கடலுட் பவளவாய்த் | |
|
தொண்டைக் கனிக டொழுதனவே. | |
|
(இ - ள்.) நாண் உள்இட்டுச் சுடர் வீசும் நன்மாணிக்கம் நகுதாலி - நாணைத் தன்னுள்ளே அடக்கி, ஒளிவீசும் நல்ல மணிகளிழைத்த நகுகின்ற தாலியை; நல்லார் பேணிக் கழுத்து அணிந்து - மடவார் ஓம்பிக் கழுத்திலே அணிந்து ; பெருங்கண்கருமை விருந்து ஊட்டி - பெரிய கண்ணிலே கரிய மையைப் புதுமைபெற அணிந்து; நீள்நீர் முத்தம் நிரைமுறுவல் - பெரு நீர்மையுடைய முத்தனைய வரிசையான பற்களை; கடுச்சுட்டு உரிஞ்சக் கதிர் உமிழ்ந்து - கடுவைச் சுட்டுத் தேய்த்தலால் அவை ஒளியை வீசி; தோள்நீர்க் கடலுள் பவளவாய் - தோண்டின நீரையுடைய கடலிலுள்ள பவளம் போன்ற வாயை; தொண்டைக் கனிகள் தொழுதன - கொவ்வைக் கனிகள் தோற்று வணங்கின.
|