முத்தி இலம்பகம் |
1525 |
|
|
(இ - ள்.) மணிவண்டு ஒன்றே நலம் பருக - ஒரு கரிய வண்டே நலத்தைப் பருகுமாறு; மலர்ந்த செந்தாமரைத் தடம் போல் - பூத்த செந்தாமரைப் பொய்கைபோல; அணிவேல் மன்னன் நலம் பருக - அழகிய வேலையுடைய மன்னவன் தம் நலத்தை நுகரும்படியாக; அலந்த அம்புஆர் மழைக் கண்ணார் - மலர்ந்த காமன் அம்பு போன்ற குளிர்ந்த விழியார்; பணி ஆர் பண்ணுப்பிடி ஊர்ந்து - அணிகலம் நிறைந்த சமைத்தலையுடைய பிடியை ஏறிப்போய்; பரூஉக்கால் செந்நெல் கதிர்சூடி - பெரிய தாளையுடைய செந்நெலின் கதிரை அணிந்து; தணியார் கழனி விளையாடி - அமையாராய்க் கழனியிலே விளையாடி; தகைபாராட்டத்தங்கினார் - (அரசன்) தம் அழகைப் பாராட்ட அக் கழனியிலே தங்கினார்.
|
(வி - ம்.) இது நகரினின்றும் போய், நாட்டிலுள்ளவற்றை நுகர்ந்து இன்பமுற்றமை கூறிற்று. 'சூடி' என்றார் தொழத்தகுதலின்; 'தொழுது கொண்டுண்க உகா அமை நன்கு' (ஆசார. 20) என்றார்.
|
மணிவண்டு சீவகனுக்கு உவமை. மனைவியர் குழாத்திற்குச் செந்தாமரைத் தடம் உவமை. மன்னன் : சீவகன். பருக - பருகுமாறு. அலர்ந்த அம்பு - காமன் அம்பு என்க. பண்ணு - சமைத்தல். தகை - அழகு.
|
( 101 ) |
2700 |
எண்ணற் கரிய குங்குமச்சேற் | |
|
றெழுந்து நான நீர்வளர்ந்து | |
|
வண்ணக் குவளை மலரளைஇ | |
|
மணிக்கோல் வள்ளத் தவனேந்த | |
|
வுண்ணற் கினிய மதுமகிழ்ந்தா | |
|
ரொலியன் மாலை புறந்தாழக் | |
|
கண்ணக் கழுநீர் மெல்விரலாற் | |
|
கிழித்து மோந்தார் கனிவாயார். | |
|
(இ - ள்.) எண்ணற்கு அரிய குங்குமச் சேற்று எழுந்து - அளவிடற்கரிய குங்குமச் சேற்றிலே எழுந்து; நானநீர் வளர்ந்து - கத்தூரி நீரிலே வளர்ந்து; வண்ணக் குவளைமலர் அளைஇ - நிறத்தையுடையவாகிய குவளை மலரை விரவி; உண்ணற்கு இனிய மது - பருகுதற்கு இனிய மதுவை; மணிக்கோல் வள்ளத்து - மணிகள் அழுத்தி விளிம்பு பிரம்புகட்டின வட்டிலில்; அவன் ஏந்த - அரசன் ஏந்த; ஒலியல் மாலை புறம்தாழக் கனிவாயார் மகிழ்ந்தார் - மலர் மாலையும் முத்துமாலையும் புறத்தே தாழக் கனிவாயினர் பருகி மகிழ்ந்தனர்; கண்ணக் கழுநீர் மெல்விரலாற் கிழித்து மோந்தார் - (பருகிய பின்) இவர்கள் குறிப்பை அவன் கருதும்படி, கழுநீரை உகிராற் கிழித்து மோந்தார்.
|