பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1527 

”மார்பென்றது மெய்யை. பருகியென்னுஞ் செய்தென் எச்சம் காரணகாரியப் பொருட்டாய்க் கருப்பம் தங்கினமை தோன்ற நின்றது; பருக என்றுமாம். பூப்பின் புறப்பாடீராறு நாளும் நீவாதுறைந்து, நாளும் ஓரையும் நன்றாயவாறும் உணர்ந்து, தலைவியை நோக்கி, 'நீயும் இன்பங் கருதாது இவனே போலும் புதல்வனை யானுடையேனாக வேண்டும் என்று கருதுவாய்' எனத் தலைவன் கூறிப் பின்னர்ப் புணர்தல் வேண்டும் என நூலிற் கூறியவாறே இவரும் கூறினார்.”

   'மார்பின் நலம் பருகி' என்பதைக் கொண்டே இத்துணையுங் கொண்டு கூறினார்; 'இவரும் கூறினார்' என்பதால் நூலாகிரியர் கருத்தும் அதுவே என்றாராயிற்று. நூலாசிரியர் கருத்தாயின் விளக்கமாகவே கூறுவாரென்க.

( 103 )
2702 தீம்பால் சுமந்து முலைவீங்கித்
  திருமுத்தீன்ற வலம்புரிபோற்
காம்போ் தோளார் களிறீன்றார்
  கடைக டோறுங் கடிமுரசந்
தாம்பாற் பட்ட தனிச்செங்கோற்
  றரணி மன்னன் மகிழ்தூங்கி
யோம்பா தொண்பொன் சொரிமாரி
  யுலக முண்ணச் சிதறினான்.

   (இ - ள்.) காம்புஏர் தோளார் - மூங்கிலனைய அழகிய தோளையுடைய அம் மங்கையர்; தீம்பால் சுமந்து முலை வீங்கி இனிய பாலைச் சுமந்து முலையடி பருத்து; திருமுத்து ஈன்ற வலம்புரிபோல் - அழகிய முத்தைப் பெற்ற வலம்புரிபோல் (நலம் தொலைந்து); களிறு ஈன்றார் - களிறனைய மக்களை பெற்றனர்; கடைகள் தோறும் கடிமுரசம் தாம்பாற்பட்ட - (அப்போது) வாயில்கள் தோறும் மணமுரசுகள் கூறுபட நின்றொலித்தன; தனிச் செங்கோல் தரணி மன்னன் மகிழ்தூங்கி - தனித்த செங்கோலையுடைய நிலவேந்தன் களிப்படைந்து; ஓம்பாது ஒண்பொன் சொரிமாரி உலகம் உண்ணச் சிதறினான் - வரையாமற் சிறந்த பொன் பெய்யும் மழையை உலகம் உண்ணுமாறு பெய்தான்.

   (வி - ம்.) திருமுத்து - அழகிய முத்து; திருவாகிய முத்துமாம். முத்து மகவிற்கும் வலம்புரி தேவியர்க்கும் உவமை. காம்பு - மூங்கில். களிறு என்றது பிள்ளைகளை. தாம் : அசை. மன்னன் : சீவகன்.

( 104 )
2703 காடி யாட்டித் தராய்ச் சாறுங்
  கன்னன் மணியு நறுநெய்யுங்
கூடச் செம்பொன் கொளத்தேய்த்துக்
  கொண்டு நாளும் வாயுறீஇப்