பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1528 

2703 பாடற் கினிய பகுவாயுங்
  கண்ணும் பெருக வுகிருறுத்தித்
தேடித் தீந்தேன் றிப்பிலிதேய்த்
  தண்ணா வுரிஞ்சி மூக்குயர்த்தார்.

   (இ - ள்.) காடி ஆட்டி - காடியை வார்த்து; தராய்ச் சாறும் கன்னல் மணியும் நறுநெய்யும் கூட - பிரமிச் சாறும் கண்டசர்க்கரைத் தேறும் நெய்யும் தம்மில்கூட; செம்பொன் கொளத்தேய்த்து - பொன்னால் தேய்த்து ; கொண்டு நாளும் வாய் உறுத்தி- இவற்றைக்கொண்டு நாடோறும் குழந்தைகள் கொள்ளும்படி வாயில் ஊட்டி; பாடற்கு இனிய பகுவாயும் கண்ணும் பெருக - பாடுதற்கினிய வாயும் கண்ணும் பெருகும்படி; உகிர் உறுத்தி - நகத்தால் அகற்றி; தீந்தேன் தேடிக் திப்பிலி தேய்த்து - இனிய தேனிலே அதிவிடயத்தையும் திப்பிலியையும் தேய்த்து (வாயுறுத்தி); அண்ணா உரிஞ்சி - அண்ணாக்கை உரிஞ்சி; மூக்கு உயர்த்தார் - மூக்கை உயர்த்தினார்.

   (வி - ம்.) தேடி - அதிவிடயம்; ஆராய்ந்தென்றும் ஆம். தராய் - திராயுமாம்,

   காடி - கஞ்சி. தராய்ச்சாறு - பிரமிச்சாறு. கன்னல்மணி என்றது கற்கண்டினை. பொன்னாற் றேய்த்தென்க. வாயுநீஇ - வாயில் உறுத்தி ஊட்டி என்றவாறு. அழகுடைமையால் பாடுதற்கினிய வாய் என்க. அண்ணா - உண்ணாக்கு

( 105 )
2704 யாழுங் குழலு மணிமுழவு
  மரங்க மெல்லாம் பரந்திசைப்பத்
தோழன் விண்ணோ னவட்டோன்றி
  வயங்காக் கூத்து வயங்கியபின்
காழார் வெள்ளி மலைமேலுங்
  காவன் மன்னார் கடிநகர்க்கும்
வீழா வோகை யவன்விட்டான்
  விண்பெற் றாரின் விரும்பினார்.

   (இ - ள்.) யாழும் குழலும் அணி முழவும் அரங்கம் எல்லாம் பரந்து இசைப்ப - யாழ் குழல் அழகிய முழவு ஆகியவை அரங்குகளில் எல்லாம் பரவி யிசைக்குமாறு; விண்ணோன் தோழன் அவண் தோன்றி - சுதஞ்சணனாகிய தோழன் அங்கே தோன்றி; வயங்காக் கூத்து வாங்கியபின் - இவ்வுலகில் ஆடாத கூத்தெலாம் ஆடிய பிறகு; காழ் ஆர் வேள்ளி மலைமேலும் - திண்மை பொருந்திய வெள்ளி மலைமேலும்; காவல் மன்னர் கடி நகர்க்கும் - காவலையுடைய (தன் உறவினராகிய) மன்னரின்