நாமகள் இலம்பகம் |
153 |
|
(இ - ள்.) சீற்றம்மிக்க மன்னவன் சேர்ந்த குஞ்சரம் நுதல் - சீற்றம் மிகுந்த சச்சந்தன் தன்னை எதிர்த்த யானைகளின் நெற்றியிலே; கூற்று அருங் குருதிவாள் கோடுஉற அழுத்தலின் - சொல்லுதற்கரிய சிறப்பினையுடைய குருதி படிந்த வாளைத் தந்தங்களிற்பட அழுத்தியபோது; ஊற்றுஉடை நெடுவரை உருமு உடன்று இடித்தென - ஊற்றினையுடைய பெரிய மலையிலே இடிசினந்து தாக்கினாற்போல ஆகி; மாற்றுஅரு மதக்களிறு மத்தகம் பிளந்த - நீங்காத மதமுடைய களிறுகளின் நெற்றிகள் பிளந்தன.
|
|
(வி - ம்.) கோடுறவ் வழுத்தலின்: வகரம் வண்ணம் நோக்கி விரிந்தது. ஊற்றறாத மலை மதமறாத களிறுகட்குவமை.
|
( 249 ) |
279 |
வேன்மி டைந்த வேலியும் |
|
பிளந்து வெங்கண் வீரரை |
|
வான்ம யிர்ச்செய் கேடகத் |
|
திடித்து வாள்வ லையரிந் |
|
தூனு டைக் குருதியுள் |
|
ளுழக்கு புத்தி ரிதரத் |
|
தேன்மி டைந்த தாரினான் |
|
செங்க ளஞ்சி றந்ததே. |
|
(இ - ள்.) வேல் மிடைந்த வேலியும் பிளந்து - வேல் நெருங்கிய (வீரர்) வேலியையும் பிளந்து; வெங்கண் வீரரை வால் மயிர்செய் கேடகத்து இடித்து - (தடுத்த) கொடிய வீரர்களை ஒளிவிடும் மயிராற் செய்த கேடகத்தால் இடித்து; வாள்வலை அரிந்து - வாள் வலையையும் அறுத்து; ஊன் உடைக் குருதியுள் உழக்குபு திரிதர - ஊனை உடைய குருதி வெள்ளத்திலே உழக்கித் திரிதலால் ; தேன் மிடைந்த தாரினான் செங்களம் சிறந்தது - வண்டுகள் மொய்க்கும் மாலையினனான சச்சந்தனின் போர்க்களம் பொலிவுற்றது.
|
|
(வி - ம்.) வேலி ஆகுபெயராதலின் பிரித்தென்னாது பிளந்தென்றார். வலையென்றார் தப்பாமற் சூழ்தலின்.
|
|
இத்துணையும் இவன் வென்றியாதலின் இவன் களம் என்றார்.
|
( 250 ) |
வேறு
|
|
280 |
உப்புடைய முந்நீ ருடன்றுகரை கொல்வ |
|
தொப்புடைய தானையு ளொருதனிய னாகி |
|
யிப்படி யிறைமக னிருங்களிறு நூற |
|
வப்படையு ளண்ணலு மழன்றுகளி றுந்தி, |
|