| முத்தி இலம்பகம் |
1530 |
|
|
|
(இ - ள்.) ஐயன்மார்கள் - அக்குழந்தைகள்; ஐயாண்டு எய்தி - ஐந்து வயது நிறைந்து; மை ஆடி - மை ஓலை பிடித்து ; கலைகள் அறிந்தார் - கலைகளைக் கற்றார்; படை நவின்றார் - படைக்கலம் பயின்றார்; கொய் பூ மாலை - கொய்த மலர் மாலையும்; குழல் - சிகையும்; மின்னும் கொழும்பொன் தோடும் - ஒளிர்கின்ற சிறந்த பொன்னாலான தோடும் ; குண்டலமும் - குண்டலமும்; துளக்கின்றி - அசையாமல்; ஆலும் கலிமா வெகுண்டு ஊர்ந்தார் - அசையும் மனம் செருக்கிய குதிரைகளை வெகுண்டு செலுத்தினார்; மொய் ஆர் அலங்கல் மார்பற்கு முப்பது ஆகிநிறைந்தது - (அப்போது) மலர் நெருங்கிய மாலையணிந்த சீவகவேந்தனுக்கு முப்பதாண்டாகிய நிறைவுற்றது.
|
|
(வி - ம்.) வெகுண்டு ஊர்ந்தார் - அடித்துச் செலுத்தினார். மாலை முதலியன அசையாமல் ஊர்தல் அரிது
|
|
நிறைந்ததென்றது, அரசவுரிமை நிகழ்த்தின யாண்டு முப்பதும் முன்னர்க் கழிந்த யாண்டு பதினைந்தும் ஆக நாற்பத்தையாண்டு சென்றமையின், இல்லறத்திற்குரிய காலம் முற்றுப் பெற்ற தென்றவாறு. இனி, துறவறத்தின் மேல் உள்ளம் நிகழ்தற்குக் காரணம் கூறுகிறார்.
|
( 108 ) |
5.சோலை நுகர்வு
|
| 2707 |
பூநிறை செய்த செம்பொற் | |
| |
கோடிகம் புரையு மல்குல் | |
| |
வீநிறை கொடிய னாரும் | |
| |
வேந்தனு மிருந்த போழ்திற் | |
| |
றூநிறத் துகிலின் மூடிப் | |
| |
படலிகை கொண்டு வாழ்த்தி | |
| |
மாநிறத் தளிர்நன் மேனி | |
| |
மல்லிகை மாலை சொன்னாள். | |
|
|
(இ - ள்.) பூ நிறை செய்த செம்பொன் கோடிகம் புரையும் அல்குல் - மலர் நிறைந்த பொன்னாலான பூந்தட்டைப்போன்ற அல்குலையுடைய; வீ நிறை கொடியனாரும் - மலர் நிறைந்த கொடிகளைப்போன்ற அரசியரும்; வேந்தனும் இருந்த போழ்தில் - அரசனும் வீற்றிருக்கும்போது; படலிகை தூநிறத் துகிலின் மூடிக்கொண்டு வாழ்த்தி - பூவிடு பெட்டியைத் தூய நிறமுடைய ஆடையாலே மூடிக் கையிலே கொண்டு அரசனை வாழ்த்தி; மாநிறத் தளிர் நல் மேனி மல்லிகை மாலை சொன்னாள் - மாந்தளிர்போன்ற மேனியையுடைய மல்லிகைமாலை கூறினாள்.
|