| முத்தி இலம்பகம் |
1531 |
|
|
|
(வி - ம்.) 'வீநிறை கொடி' என்றார் புதல்வர்ப் பயந்தமை தோன்ற.
|
|
நிறை - நிறைதல். கோடிகம் - பூந்தட்டு. புரையும் : உவமவுருபு. வீ - மலர் : இது மகவிற்குவமை. கொடியனார் : சீவகன் மனைவிமார். வேந்தன் : சீவகன். படலிகை - பூவிடு பெட்டி. மா - மாமரம். மல்லிகை மாலை : ஒரு தோழி.
|
( 109 ) |
| 2708 |
தடமுலை முகங்கள் சாடிச் | |
| |
சாந்தகங் கிழிந்த மார்பிற் | |
| |
குடவரை யனைய கோலக் | |
| |
குங்குமக் குவவுத் தோளாய் | |
| |
தொடைமலர் வெறுக்கை யேந்தித் | |
| |
துன்னினன் வேனில் வேந்த | |
| |
னிடமது காண்க வென்றா | |
| |
ளிறைவனு மெழுக வென்றான். | |
|
|
(இ - ள்.) தடமுலை முகங்கள் சாடி - பெரிய முலை முகங்கள் தாக்கியதனால்; சாந்தகம் கிழிந்த மார்பன் - சாந்து பிளந்த மார்பினையுடைய; குடவரை அனைய கோலக் குங்குமக் குவவுத் தோளாய்! - மேலை மலைபோன்ற அழகிய குங்குமம் பூசிய திரண்ட தோளாய்!; தொடை மலர் வெறுக்கை ஏந்தி - தொடைக்குரிய மலராகிய காணிக்கையை ஏந்தி ; வேனில் வேந்தன் துன்னினன் - வேனில் மன்னன் பொழிலிலே நெருங்கினன்; இடம் அது காண்க என்றாள் - அப்பொழிலே அவனைக் காணுதற்குரிய இடம், நீ சென்று காண்பாயாக என்றாள்; இறைவனும் எழுக என்றான் - அரசனும் எழுக என்றான்.
|
|
(வி - ம்.) தொடை மலர் : தொத்தாக பலர்ந்த மலருமாம்
|
|
சாடி - மோதி. சாந்து - சந்தன முதலியன. குடவரை - மேலைமலை. வெறுக்கை - பொருள் : ஈண்டுக் காணிக்கைப் பொருள் குறித்து நின்றது. பாகுடம் என்பர் நச்சினார்க்கினியா.் வேனில் வேந்தன் : காமன். அஃது இடம் என மாறுக. இறைவன் : சீவகன்.
|
( 110 ) |
| 2709 |
முடித்தலை முத்த மின்னு | |
| |
முகிழ்முலை முற்ற மெல்லாம் | |
| |
பொடித்துப் பொன் பிதிரிந்தவாகத் | |
| |
திளையவர் புகழ்ந்து சூழக் | |
| |
கடுத்தவாள் கனல வேந்திக் | |
| |
கன்னியர் காவ லோம்ப | |
| |
விடிக்குரற் சீய மொப்பா | |
| |
னிழையொளி விளங்கப் புக்கான். | |
|