பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1532 

   (இ - ள்.) முடித்தலை முத்தம் மின்னும் முகிழ் முலை முற்றம் எல்லாம் - முடியைத் தலையிலேயுடைய முத்துக்கள் ஒளிரும,் அரும்புபோலும் முலையின் பரப்பெல்லாம்; பொன் பொடித்துப் பிதிர்ந்த ஆகத்து இளையவர் புகழ்ந்து சூழ - சுணங்கு தோன்றிச் சிதறின மார்பினையுடைய அரசியர் புகழ்ந்து சூழ; கடுத்த வாள் கனல ஏந்திக் கன்னியர் காவல் ஓம்ப - சினத்துக்குரிய வாள் ஒளிர ஏந்திக் கன்னிப் பெண்கள் காவலாக வர; இடிக்குரல் சீயம் ஒப்பான் - இடிபோன்ற குரலையுடைய சிங்கம் போன்றவன்; இழை ஒளி விளங்கப் புக்கான் - அணிகலனின் ஒளி விளங்க அப் பொழிலிலே புகுந்தான்,

   (வி - ம்.) பொடித்து - தோன்றி. பொன் - சுணங்கு; ஆகுபெயர். இளையவர் - ஈண்டு மகளிர். இடிக்குரல் - இடியை ஒத்த குரல். சீயம் - அரிமா.

( 111 )
2710 இலங்குபொன் னார மார்பி னிந்திர னுரிமை சூழக்
கலந்தபொற் காவு காண்பான் காமுறப் புக்க தேபோ
லலங்குபொற் கொம்பு னாரு மன்னனு மாட மாதோ
நலங்கவின் கொண்ட காவு நல்லொளி நந்திற் றன்றே.

   (இ - ள்.) இலங்கு பொன் ஆரம் மார்பன் இந்திரன் - விளங்கும் பொன்மாலை அணிந்த மார்பையுடைய இந்திரன்; உரிமை சூழக் கலந்த பொன் காவு காண்பான் - தன் காதலியர் சூழக் கலந்த கற்பகச் சோலையைக் காண; காமுறப் புக்கதே போல் - விருப்பம் உண்டாகப் புகுந்த தன்மை போல; அலங்கு பொன் கொம்பனாரும் மன்னனும் ஆட - அசையும் பொற்கொடி போன்றவரும் அரசனும் புகுந்து ஆடியதால்; நலம் கவின் கொண்ட காவு நல் ஒளி நந்திற்றன்றே - நலமும் அழகும் கொண்ட அப்பொழில் நல்லொளியாற் சிறப்புற்றது.

   (வி - ம்.) இந்திரன் சீவகனுக்கு உரிமை மகளிர்க்கும் உவமை. பொற்காவு என்றது கற்பகச்சோலையை. இது சீவகன் முதலியோர் ஆடுகின்ற சோலைக்கு உவமை என்க. நந்துதல் - சிறத்தல்.

( 112 )
2711 புலவியுண் மகளிர் கூந்தற்
  போதுகுக் கின்ற தேபோற்
குலவிய சிறகர்ச் செங்கட்
  கருங்குயில் குடையக் கொம்பர்
நிலவிய தாது பொங்க
  நீண்மலர் மணலிற் போர்த்துக்
கலவியிற் படுத்த காய்பொற்
  கம்பல மொத்த தன்றே.