| முத்தி இலம்பகம் |
1534 |
|
|
| 2713 |
காதிக்கண் ணரிந்து வென்ற | |
| |
வுலகுணர் கடவுள் காலத் | |
| |
தாதிக்கண் மரங்கள் போன்ற | |
| |
வஞ்சொலீ ரிதனி னுங்கள் | |
| |
காதலிற் காண லுற்ற | |
| |
விடமெலாங் காண்மி னென்றா | |
| |
னீதிக்க ணின்ற செங்கோ | |
| |
னிலவுவீற் றிருந்த பூணான். | |
|
|
(இ - ள்.) நீதிக்கண் நின்ற செங்கோல் நிலவு வீற்றிருந்த பூணான் - அறத்திலே நிலைபெற்ற செங்கோலையும் நிலவு தங்கிய அணிகளையும் உடைய சீவக மன்னன்; அம் சொலீர் - அழகிய மொழியினீர்!; காதிக் கண் அரிந்து வென்ற உலகு உணர் கடவுள் காலத்து - காதி வினைகளைத் தன்னிடத்தே இல்லையாம் படி வேர் அறுத்து, அவற்றை வென்ற, உலகுணர்ந்த இறைவன் தோன்றின காலமாகிய; ஆதிக்கண் மரங்கள் போன்ற - ஆதிக்கால மரங்கள்போலப் பயனுற்று நின்றன; இதனின் உங்கள் காதலின் காணல் உற்ற இடம் எலாம் காண்மின் என்றான் - இதனாலே நீர் நும் காதலாற் காணவேண்டிய இடங்கள் எல்லாவற்றையும் சென்று காண்பீராக என்றான்.
|
|
(வி - ம்.) காதி - காதிவினைகள், அவை ஞானாவரணீயம் முதலியன. கடவுள் என்றது இடபதீர்த்தங்கரரை. இவர் தோன்றிய காலத்தில் ”முகில்கள் எழுந்து மழை பொழிந்தன; எல்லாக் கூலங்களும் உழுதுவித்தாமல் காலவியல்பானே தாமே விளைந்தன. கற்பக மரங்கள் மறைந்த பின்னர் பல்வேறு வகையான மரங்கள் தாமே தோன்றி மல்கின,”என்று சீ¦புராணம் கூறும். எனவே ஈண்டு ஆதிக்கண் மரங்கள் என்றது அக்காலத்தே தாமே தோன்றியவற்றை என்க. இடபதீர்த்தங்கரர் தோன்றுமுன் இவ்விடமெல்லாம் போகபூமியாயிருந்தது என்றும் அப்பால் கருமபூமியாயிற்று என்றும் கூறுப.
|
( 115 ) |
| 2714 |
வானவர் மகளி ரென்ன | |
| |
வார்கயிற் றூச லூர்ந்துங் | |
| |
கானவர் மகளி ரென்னக் | |
| |
கடிமலர் நல்ல கொய்துந் | |
| |
தேனிமிர் குன்ற மேறிச் | |
| |
சிலம்பெதிர் சென்று கூயுங் | |
| |
கோனமர் மகளிர் கானிற் | |
| |
குழாமயில் பிரிவ தொத்தார். | |
|
|
(இ - ள்.) வானவர் மகளிர் என்ன வார்கயிற்று ஊசல் ஊர்ந்தும் - விண்ணவர் மகளிரைப்போல நீண்ட கயிற்றூசலிலே
|