| முத்தி இலம்பகம் |
1535 |
|
|
|
ஆடியும்; கானவர் மகளிர் என்னக் கடிமலர் நல்ல கொய்தும் - வேட்டுவர் மகளிர் போல மணமுறு மலர்களில் நல்லவற்றைப் பறித்தும்; தேன் இமிர் குன்றம் ஏறிச் சிலம்ப எதிர் சென்று கூயும் - வண்டுகள் முரலும் குன்றுகளிலே ஏறி அவற்றின் எதிரொலி உண்டாகக் கூவியும்; கோன் அமர் மகளிர் கானில் குழாமயில் பிரிவது ஒத்தார் - அரசன் விரும்பும் அரசியர் காட்டிலே குழுமியிருந்த மயில்கள் பிரிந்து செல்வது போன்று சென்றனர்.
|
|
(வி - ம்.) வானவர் மகளிர் ஊசலாடு மகளிர்க்குவமை. கானவர் மகளிர் பூக்கொய்யும் மகளிர்க்குவமை. கடிமலர் - மணமலர். சிலம்பெதிர் கூவுதல் குறிஞ்சி நிலமகளிர் விளையாட்டினுள் ஒன்று. கூயும் - கூவியும். கோன் : சீவகன். கான் - சோலை.
|
( 116 ) |
| 2715 |
நெடுவரை யருவி யாடிச் | |
| |
சந்தன நிவந்த சோலைப் | |
| |
படுமதங் கவரும் வண்டு | |
| |
பைந்தளிர்க் கவரி யேந்திப் | |
| |
பிடிமகிழ்ந் தோப்ப நின்ற | |
| |
பெருங்களிற் றரசு நோக்கி | |
| |
வடிமதர் மழைக்க ணல்லார் | |
| |
மன்னனை மகிழ்ந்து நின்றார். | |
|
|
(இ - ள்.) நெடுவரை அருவி ஆடி - பெரிய மலையிலுள்ள அருவியிலே ஆடி; சந்தனம் நிவந்த சோலை - சந்தன மரங்கள் உயர்ந்த சோலையிலே; படுமதம் கவரும் வண்டு பைந்தளிர்க் கவரி ஏந்தி - தன்னிடந்தோன்றும் மதத்தைக் கவரும் வண்டைப் பைந்தளிராகிய கவரியை எடுத்து; பிடி மகிழ்ந்து ஓப்ப நின்ற - பிடி களிப்புடன் ஓட்ட நின்ற; பெருங்களிற்று அரசு நோக்கி - பெரிய களிற்று வேந்தைப் பார்த்து; வடி மதர் மழைக்கண் நல்லார் மன்னனை மகிழ்ந்து நின்றார் - கூரிய மதர்த்த மழைக்கண் மங்கையர் (தாமும் அவ்வாறு இன்பம் நுகர) அரசனை விரும்பி நோக்கி நின்றனா
|
|
(வி - ம்.) சந்தனம் - சந்தன மரம். நிவந்த - உயர்ந்த. படுமதம் : வினைத்தொகை. களிற்றரசு - யூதநாதன். வடி - மாவடு, மன்னன் : சீவகன்.
|
( 117 ) |
| 2716 |
கொழுமடற் குமரி வாழைத் | |
| |
துகிற்சுருள் கொண்டு தோன்றச் | |
| |
செழுமலர்க் காம வல்லிச் | |
| |
செருக்கயல் சிற்ப மாகக் | |
| |
|