| முத்தி இலம்பகம் |
1536 |
|
|
| 2716 |
கழுமணிச் செம்பொ னாழிக் | |
| |
கைவிர லுகிரிற் கிள்ளி | |
| |
விழுமுலைச் சூட்டி நின்றார் | |
| |
விண்ணவர் மகளி ரொத்தார். | |
| |
|
|
(இ - ள்.) கொடுமடல் குமரி வாழைத் துகில் சுருள் கொண்டு - கொழுவிய மடலையுடைய கன்னி வாழையின், துகிலனைய வெள்ளிய குருத்தை எடுத்துக்கொண்டு; தோன்ற - அதனுள்ளே (சிற்பத்) தொழில் தோன்ற; செழுமலர்க் காம வல்லி செருக்கயல் சிற்பம் ஆக - செழுவிய மலரையுடைய காம வல்லியையும் அக் கொடியின் நடுவே கயற்பிணக்கையும் ஓவியமாக; கழுமணிச் செம்பொன் ஆழி - கழுவிய மணியிழைத்த பொன்னாழியணிந்த; கைவிரல் உகிரின் கிள்ளி - கைவிரலின் நகத்தாற் கிள்ளி; விழுமுலைச் சூட்டி நின்றார் - சிறந்த முலையிலே அழகு தோன்றச் சூட்டின நின்றனர்; விண்ணவர் மகளிர் ஒத்தார் - (அவர்கள்) வானவர் மகளிரைப் போன்றனர்.
|
|
(வி - ம்.) விழுமம் முலை : விழுமுலை : விகாரம். விழுமம் - சிறப்பு : உரிச்சொல்.
|
|
குமரிவாழை - இளவாழை. துகில் ஈண்டு வாழைக் குருத்திற்கு ஆகுபெயர். சிற்பத்தொழில் தோன்ற என்க. காமவல்லி - ஒரு பூங்கொடி. செருக்கயல் - ஒன்றனோடொன்று போரிடும் இரண்டு கயல் மீன்கள் என்க.
|
( 118 ) |
| 2717 |
கடைதயிர்க் குரல வேங்கை | |
| |
கண்ணுறச் சென்று நண்ணி | |
| |
மிடைமயிர்க் கவரி நல்லான் | |
| |
கன்றுணக் கண்டு நிற்பார் | |
| |
புடைதிரண் டெழுந்த பொம்மல் | |
| |
வனமுலை பொறுக்க லாற்றார் | |
| |
நடைமெரிந் திகலி யன்ன | |
| |
நன்னடை நயந்து நிற்பார். | |
|
|
(இ - ள்.) கடைதயிர்க் குரல வேங்கை கண் உறச் சென்று நண்ணி - கடையும் தயிரின் குரலையுடைய வேங்கை எதிர்ப்படுதலாலே சென்றணுகி; மிடைமயிர்க் கவரி நல்லான் கன்று உண - நெருங்கிய மயிரையுடைய கவரியை நல்ல ஆவின் கன்று பாலுண்ண; கண்டு நிற்பார் - பார்த்து நிற்பார்; அன்ன நன்னடை இகலி - அன்னத்தின் நல்ல நடையுடன் மாறு பட்டு நடந்து; புடைதிரண்டு எழுந்த பொம்மல் வனமுலை பொறுக்கல் ஆற்றார் - பக்கத்திலே திரண்டு எழுந்த பருத்த
|