| முத்தி இலம்பகம் |
1537 |
|
|
|
அழகிய முலையின் சுமையைப் பொறுக்க வியலாமல்; நடைமெலிந்து - நடை தளர்ந்து (தோற்று); நயந்து நிற்பார் - அன்னத்தின் நடையை விரும்பி நிற்பார்.
|
|
(வி - ம்.) கடையுங்காலத்துத் தயிரில் எழுகின்ற ஓசையை ஒத்த குரலையுடைய வேங்கை என்றவாறு. வேங்கை - புலி. ”புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி - தயிர்கலக்கி” என்றும் (பெரும்பாண்.156-8), ”கடையலங்குரல வாள்வரி யுழுவை” என்றும் (அகநா. 277) பிறரும் ஓதுதல் உணர்க. கவரியை ஆன்கன்று பாலுண்ண என்க.
|
( 119 ) |
| 2718 |
எம்வயின் வருக வேந்த | |
| |
னிங்கென விரங்கு நல்லியாழ் | |
| |
வெம்மையின் விழையப் பண்ணி | |
| |
யெஃகுநுண் செவிகள் வீழச் | |
| |
செம்மையிற் கனிந்த காமத் | |
| |
தூதுவிட் டோத முத்தம் | |
| |
வெம்முலை மகளிர் வீழ்பூம் | |
| |
பொதும்பருள் விதும்பி னாரே. | |
|
|
(இ - ள்.) இங்கு எம் வயின் வேந்தன் வருக என - ஈங்கு நின்ற எம்மிடத்தே அரசன் வருக என்று கருதி ; இரங்கும் நல்யாழ் வெம்மையின் விழையப்பண்ணி - ஒலிக்கும் நல்ல யாழைத் (தாம் கொண்ட) புணர்ச்சி விருப்பத்தாலே விரும்ப இசைத்து; எஃகு நுண் செவிகள் வீழ - அரசனுடைய கூரிய நுண்செவி விரும்ப; செம்மையின் கனிந்த காமத் தூதுவிட்டு - தலைமையுடன் கனிதல் கொண்ட காமத்தின் தூதாக விட்டு; ஓதம் முத்தம் வெம்முலை மகளிர் - கடல் முத்து விரும்பின முலைகளையுடைய அம்மகளிர்; வீழ் பூம் பொதும்பருள் விதும்பினார் - சுற்றுக் கவிந்த இளமரச் செறிவிலே கூடுதற்கு விதும்பினார்.
|
|
(வி - ம்.) விதும்பினார் - நடுங்கினார். கேட்டால் காமத்தையே விரும்புதலிற் பாட்டைக் 'காமத்தூது' என்றார். எஃகுநுண் செவி; தோற்செவி, மரச்செவி, எஃகுச் செவி என்பனவற்றுள் மிக்கது.
|
( 120 ) |
| 2719 |
பிடிமரு ணடையி னார்தம் | |
| |
பெருங்கவின் குழையப் புல்லித் | |
| |
தொடைமலர்க் கண்ணி சோ்த்திச் | |
| |
சுரும்புண மலர்ந்த மாலை | |
| |
யுடைமது வொழுகச் சூட்டி | |
| |
யுருவத்தார் குழைய வைகிக் | |
| |
கடிமலர் மகளி ரொத்தார் | |
| |
காவலன் களிவண் டொத்தான். | |
|