நாமகள் இலம்பகம் |
154 |
|
(இ - ள்.) உப்புஉடைய முந்நீர் உடன்று கரை கொல்வது ஒப்பு உடைய - உப்பினையுடைய கடல் மாறுபட்டுக் கரையை இடிப்பதை உவமையாகக்கொண்ட; தானையுள் ஒரு தனியன் ஆகி - படையிலே உவமையின்றித் தனித்த ஒருவனாகி; இப்படி இறைமகன் இருங்களிறு நூற - இவ்வாறு சச்சந்தன் பெரிய களிற்றுத் திரளைப் பிளக்கும்போது; அப்படையுள் அண்ணலும் அழன்று களிறு உந்தி - எதிர்ப்படையின் தலைவனாகிய கட்டியங்காரனுஞ் சினந்து களிற்றைச் செலுத்தி;
|
|
(வி - ம்.) அண்ணல் : இகழ்ச்சிக் குறிப்பு - இப்பாட்டுக் குளகம்.
|
|
தன் காவலனையே அழிக்கத் தொடங்கிய படைக்கு முந்நீர் உடன்று கரைகொல்வது ஒப்புடைய தானை என்ற நயம் உணர்க. அப் படையுள் அண்ணல் என்றது கட்டியங்காரனை.
|
( 251 ) |
281 |
நீடக மிருந்தநிழ னேமிவல னேந்திக் |
|
கேடக மறுப்பநடு வற்றரவு சோ்ந்தாங் |
|
கோடுகதிர் வட்டமென வொய்யென வுலம்பிக் |
|
காடுகவர் தீயின்மிகை சீறுபு வெகுண்டான். |
|
(இ - ள்.) நீடுஅகம் இருந்த நிழல்நேமி வலன் ஏந்தி - நீண்ட நாள் (பகையின்மையால்) உள்ளிருந்த ஒளிமிகும் ஆழியை வலக்கையில் எடுத்து; அரவு சேர்ந்து நடு அற்று ஆங்குஒடு கதிர்வட்டம் என - பாம்பு சேர்தலாற் பாதி மறைந்து வானில் ஓடுகின்ற ஞாயிற்றின் வட்டம் என; கேடகம் அறுப்ப - கேடகத்தை அறுத்தலின்; ஒய்யென உலம்பி - ஒய்யென்று சச்சந்தன் முழங்கி; மிகைசீறுபு - கட்டியங்காரனின் வரம்பு மீறிய செயலுக்குச் செற்றங்கொண்டு; காடுகவர் தீயின் வெகுண்டான் - காட்டைப் பற்றிய தீயைப்போலச் சினந்தான்.
|
|
(வி - ம்.) சீறுபு : இறந்தகால வினையெச்சம். ஒய்யென: ஒலிக்குறிப்பு.
|
( 252 ) |
282 |
நெய்ம்முக மணிந்துநிழ றங்கியழல் பொங்கி |
|
வைம்முக மணிந்தநுதி வாளழல வீசி |
|
மைம்முக மணிந்தமத யானைதவ நூறிக் |
|
கைம்முத னுணிந்துகளி றாழவது நோனான், |
|
(இ - ள்.) அழல்பொங்கி நெய்முகம் அணிந்து நிழல்தங்கி வைமுகம் அணிந்த நுதிவாள் அழல வீசி - அனலிலே முழுகி நெய் பூசப்பெற்று ஒளியமைந்த கூர்மைதங்கிய நுனியையுடைய வாளைச் சினந்து வீசி; மைமுகம் அணிந்த மதயானை தவநூறி - கருமை பொருந்திய முகத்தே பட்டம் அணிந்த மதயானையை
|
|