| முத்தி இலம்பகம் |
1544 |
|
|
| 2729 |
காட்டினார் தேவ ராவர் | |
| |
கைவிளக் கதனை யென்று | |
| |
தோட்டியாற் றொடக்கப் பட்ட | |
| |
சொரிமதக் களிற்றின் மீண்டான். | |
| |
|
|
(இ - ள்.) வேட்கைமை என்னும் நாவின் - விருப்பம் என்னும் நாவினாலே; காம வெம்தேறல் மாந்தி - காமமாகிய கொடிய கள்ளை நிறைய உண்டு; மாட்சி ஒன்றானும் இன்றி - பெருமை தரும் செய்கை சிறிதும் இல்லாமல்; மயங்கினேற்கு இருளை நீங்கக் கைவிளக்கு அதனைக் காட்டினார் - இன்பத்தே மயங்கிய எனக்கு இவ்விருள் நீங்கும்படி கைவிளக்காகிய (வீட்டு நெறியிலே செல்லுமாறு) இத் துறவுள்ளங் காட்டிய இவர்கள்; தேவர் ஆவார் என்று - தேவராகக் கூடும் என்று; தோட்டியால் தொடங்கப்பட்ட - அங்குசத்தால் தடுக்கப்பட்ட; மதம் சொரி களிற்றின் மீண்டான் - மதம் பெய்யும் கற்றைப்போல இன்ப நுகர்ச்சியினின்றும் எண்ணத்தைத் திருப்பினான்.
|
|
(வி - ம்.) இருளை : ஐ : அசை. காட்டினார் : மந்தியும், கடுவனும். சிலதனும். இவர்கள் இங்ஙனங் காட்டிய நல்வினையால் தேவராவார் என வாழ்த்தினான் எனினுமாம். மதம் சொரிகளிறு தோட்டியால் தொடக்கப்படல் இல்பொருளுவமை.
|
( 131 ) |
| 2730 |
கைந்நிறை யெஃக மேந்திக் | |
| |
கனமணிக் குழைவில் வீச | |
| |
மைந்நிற மணிவண் டார்ப்ப | |
| |
வார்தளிர் கவரி வீச | |
| |
மெய்ந்நெறி மகிழ்ந்து நின்றான் | |
| |
வேனில்வாய்க் காம னொத்தான் | |
| |
மொய்ந்நிற மாலை வேய்ந்து | |
| |
முருகுலா முடியி னானே. | |
|
|
(இ - ள்.) மொய்ந்நிற மாலை வேய்ந்து முருகு உலாம் முடியினான் - செறிந்த நிறமுடைய மாலை அணிந்து மணங்கமழும் முடியுடையான்; கைநிறை எஃகம் ஏந்தி - கை நிறைந்த வேலை ஏந்தி; கனம் மணிக்குழை வில்வீச - பெரிய மணிகள் இழைத்த குழை ஒளிவீச; மைநிற மணி வண்டு ஆர்ப்ப - கருநிறமுடைய அழகிய வண்டு முரல; வார்தளிர் கவரிவீச - நீண்ட தளிர்கள் கவரிபோல வீச; மெய்ந்நெறி மகிழ்ந்து நின்றான் - வீட்டுநெறியிலே விருப்புடன் நின்றவன்; வேனில்வாய்க் காமன் ஒத்தான் - வேனிலுக்குரிய காமனைக் போன்றான்.
|