| முத்தி இலம்பகம் |
1545 |
|
|
|
(வி - ம்.) 'தளிர் கவரி வீச' என்றார் பொதும்பரிடைத் தனியே நிற்றலின். காமனோடு உவமித்தார் மனவேட்கையடங்குதலின். 'சிலை வலான் போலுஞ் செறிவினான்' (கலி.143) என்றார் பிறரும்.
|
( 132 ) |
| 2731 |
நடுச்சிகை முத்துத் தாமம் | |
| |
வாணுத னான்று நக்கப் | |
| |
படுத்தனர் பைம்பொற் கட்டில் | |
| |
பாடினர் கீதந் தூப | |
| |
மெடுத்தன ரெழுந்து தேனா | |
| |
ரெரிமணி வீணை யார்த்த | |
| |
கொடிப்பல பூத்துச் சூழ்ந்த | |
| |
குங்குமக் குன்ற மொத்தான். | |
|
|
(இ - ள்.) சிகைநடு முத்துத் தாமம் வாள்நுதல் நான்று நக்க - கூந்தலின் நடுவிலே தலைப்பாளை தூக்கித் தொட்டுக் கொண்டிருக்க நின்று; பைம்பொன் கட்டில் படுத்தனர் - பொன்னால் ஆன கட்டிலை யிட்டனர்; கீதம் பாடினர் - (சிலர்) பண் இசைத்தனர்; தூபம் எடுத்தனர் - நறும்புகை ஏந்தினர்; தேன்ஆர் எரிமணி வீணை எழுந்து ஆர்த்த - (பிறகு) இனிமை நிறைந்த, ஒளிவிடும் மணிகள் இழைத்த யாழ்கள் எழுந்து ஒலித்தன; (இந் நிலையில் மகளிர் சூழக் கட்டிலில் இருந்த சீவகன்); கொடிப்பல பூத்துச் சூழ்ந்த குங்குமக் குன்றம் ஒத்தான் - கொடிகள் பல மலர்ந்து சூழந்த குங்கும மலையைப் போன்றான்.
|
|
(வி - ம்.) சிகைநடு என மாறுக. முத்துத்தாமம் என்றது தலைப்பாளை என்னும் ஒருவகைத் தலைக்கோலத்தை. நக்க - தொட. பணி மகளிர் என எழுவாய் வருவித்தோதுக. கட்டிலைப் படுத்தனர்; கீதம் பாடினர்; என்க. தேனார் வீணை : எரிமணி வீணை என இயைக்க.
|
( 133 ) |
| 2732 |
மௌ்ளவே புருவங் கோலி | |
| |
விலங்கிக்கண் பிறழ நோக்கி | |
| |
முள்ளெயி றிலங்கச் செவ்வாய் | |
| |
முறுவற்றூ தாதி யாக | |
| |
வள்ளிக்கொண் டுண்ணக் காமங் | |
| |
கனிவித்தார் பனிவிற் றாழ்ந்த | |
| |
வள்ளிதழ் மாலை மார்பன் | |
| |
வச்சிர மனத்த னானான். | |
|
|
(இ - ள்.) புருவம் மௌ்ளக் கோலி - தம் புருவத்தை மெல்ல வளைத்து; கண் விலங்கிப் பிறழ நோக்கி - கண்கள் குறுக்காகிப் பிறழும்படி நோக்கி; செவ்வாய் முள் எயிறு இலங்க -
|