| முத்தி இலம்பகம் |
1548 |
|
|
|
(வி - ம்.) வறைகள் - வறுவல்கள். குய்வளம் - தாளிப்பு வளம். ஐவருள் ஒருவன் - பாண்டவர் ஐவருள் ஒருவனாகிய வீமசேனன். ”காவெரி யூட்டிய கவர்கணைத்தூணிப், பூவிரி கச்சைப் புகழோன் தன்முன், பனி வரை மார்பன் பயந்த நுண்பொருட் பனுவல்” என்றார் சிறுபாணினும் (238 - 41). இவன் மடையனுக்குவமை.
|
( 137 ) |
| 2736 |
கைப்பொடி சாந்த மேந்திக் | |
| |
கரகநீர் விதியிற் பூசி | |
| |
மைப்படு மழைக்க ணல்லார் | |
| |
மணிச்செப்பின் வாச நீட்டச் | |
| |
செப்படு பஞ்ச வாசந் | |
| |
திசையெலாங் கமழ வாய்க்கொண் | |
| |
டொப்புடை யுறுவர் கோயில் | |
| |
வணங்குது மெழுக வென்றான். | |
|
|
(இ - ள்.) கைப்பொடி சாந்தம் ஏந்தி - முன்னர்ப் பொடியையும் பின்னர்ச் சந்தனத்தையும் தன் கையிலே வாங்கி; கரகநீர் விதியிற் பூசி - கரக நீரிலே முறைப்படி கையையும் வாயையும் கழுவி; மைப்படு மழைக்கண் நல்லார் வாசம் மணிச் செப்பின் நீட்ட - மைதீட்டிய மழைக்கண் நங்கையர் முகவாசத்தை மணிச்செப்பிலே நீட்ட; செப்பு அடு பஞ்ச வாசம் திசை எலாம் கமழ வாய்க்கொண்டு - சொல்லுதற்கரிய அப் பஞ்சவாசத்தைத் திக்கெலாம் மணக்க வாயிற் கொண்டு; ஒப்பு உடை உறுவர் கோயில் வணங்குதும் எழுக என்றான் - தனக்குத்தானே உவமையான அருகன் கோயிலை வணங்குவோம் எழுக என்று பணித்தான்.
|
|
(வி - ம்.) 'செப்படும் ஒப்புடைக் கோயில்' எனக் கூட்டிச் 'செப்பினைத் தன்னோடு உவமிக்கும் அளவில், அதனைக் கெடுக்கும் ஒப்பினையுடைய கோயில்' என்று பொருளுரைப்பர் நச்சினார்க்கினியர்.
|
|
உறுவர் - எல்லாத் தேவரினும் மிக்கவர். உறு - மிகுதி.
|
( 138 ) |
6. அறிவர் சிறப்பு
|
| 2737 |
ஒருபகல் பூசி னோராண் | |
| |
டொழிவின்றி விடாது நாறும் | |
| |
பெரியவர் கேண்மை போலும் | |
| |
பெறற்கரும் வாச வெண்ணெ | |
| |
யரிவையர் பூசி யாடி | |
| |
யகிற்புகை யாவி யூட்டித் | |
| |
திருவிழை துகிலும் பூணுந் | |
| |
திறப்படத் தாங்கி னாரே. | |
|