| முத்தி இலம்பகம் |
1549 |
|
|
|
(இ - ள்.) அரிவையர் - (அதுகேட்ட) மாதர்கள்; ஒரு பகல் பூசின் ஓர் ஆண்டு ஒழிவின்றி விடாது நாறும் - ஒருவேளை பூசினால் ஓராண்டுவரையும் விடாமல் எப்போதும் மணக்கும்; பெரியவர் கேண்மை போலும் - உயர்ந்தோர் நட்பை ஒக்கும்; பெறற்கு அரும் வாச எண்ணெய் - கிடைத்தற்கரிய மணமிகும் எண்ணெயை; பூசி ஆடி - தேய்த்துக் குளித்து; அகிற் புகை ஆவி ஊட்டி - அகிலின் புகையாலே மணமூட்டி; திருவிழை துகிலும் பூணும் - திருமகளும் விரும்பும் ஆடையும் அணியும்; திறம்படத் தாங்கினார் - வகையுற அணிந்தனர்.
|
|
(வி - ம்.) 'ஓராண்டும்' என்னும் உம்மை விகாரத்தால் தொக்கது; அஃது எக்காலமும் என்னும் பொருளது.
|
|
இதனோடு,
|
| ”மென்மையு நேயமு நன்மையு நாற்றமும் |
|
| ஒருநாட் பூசினும் ஓரியாண்டு விடாஅத் |
|
| திருமா ணுறுப்பிற்குச் சீர்நிறை யமைத்துக் |
|
| கரும வித்தகர் கைபுனைந் தியற்றிய |
|
| வாச வெண்ணெய் பூசினர்போற்றி”. (2 - 5 : 97 - 101) |
|
|
எனவரும் பெருங்கதை ஒப்புக்காணற்பாலது.
|
( 139 ) |
| 2738 |
நற்றவஞ் செய்த வீர | |
| |
ருளவழி நயத்து நாடும் | |
| |
பொற்றதா மரையி னாளிற் | |
| |
பூஞ்சிகை முத்த மின்னக் | |
| |
கொற்றவற் றொழுது சோ்ந்தார் | |
| |
கொம்பனார் வாமன் கோயின் | |
| |
மற்றவன் மகிழ்ந்து புக்கு | |
| |
மணிமுடி துளக்கி னானே. | |
|
|
(இ - ள்.) நல்தவம் செய்த வீரர் உளவழி நயந்து நாடும் - நல்ல தவம்புரிந்த வீரர்கள் இருக்குமிடத்தை விரும்பி அவரிருக்குமிடத்தை நாடிச் செல்லுகின்ற; பொற்ற தாமரையினாளின் - பொற்றாமரையாளைப் போல; பூஞ்சிகை முத்தம் மின்ன - பூங்குழலிலே முத்துக்கள் ஒளிவீச; கொம்பனார் - அம்மலர்க் கொம்பு போன்ற மங்கையர்; கொற்றவன் தொழுது சேர்ந்தார் - அரசனை வணங்கிச் சேர்த்தனர்; அவன் வாமன் கோயில் மகிழ்ந்து புக்கு - (பின்னர்) அரசன் அருகன் கோயிலை மகிழ்வுடன் அடைந்து; மணிமுடி துளக்கினான் - மணியிழைத்த முடியால் வணங்கினான்.
|