நாமகள் இலம்பகம் |
155 |
|
நன்றாக வெட்டுதலால்; களிறு கைமுதல் துணிந்துஆழ அது நோனான் - அம் மதயானை துதிக்கையின் அடி வெட்டுண்டு வீழா நிற்க, அதனைக் (கட்டியங்காரன்) பொறானாகி ;
|
|
(வி - ம்.) இப்பாட்டுக் குளகம்.
|
|
நுதி - முனை. தவ - மிக. முதல் - அடி.
|
( 253 ) |
283 |
மாலநுதி கொண்டுமழை மின்னென விமைக்கும் |
|
வேலைவல னேந்திவிரி தாமமழ கழியச் |
|
சோலைமயி லார்கடுணை வெம்முலைக டுஞ்சுங் |
|
கோலவரை மார்பினுறு கூற்றென எறிந்தான். |
|
(இ - ள்.) நுதிமாலை கொண்டு மழை மின்என இமைக்கும் வேலை வலன்ஏந்தி - நுனியில் மாலையணிந்து முகிலிடை மின் என்று ஒளிரும் வேலை வலக்கையில் எடுத்து; சோலை மயிலார்கள் துணை வெம்முலைகள் துஞ்சும் கோலவரை மார்பின் - பொழிலிடையே மயில்போன்ற மகளிரின் விருப்பமூட்டும் துணைமுலைகள் துயிலும் அழகிய மலையனைய மார்பிலே; விரிதாமம் அழகு அழிய - மலர்ந்த வாகைமாலை அழகுகெட; உறுகூற்று என எறிந்தான் - தாக்கும் கூற்று என எறிந்தான்.
|
|
(வி - ம்.) மயிலின் தன்மையார் என்ற பன்மையால் தேவியர் பலராயினார். [சச்சந்தனுக்குத் தேவியர் பலருண்டென்றும் காமக்கிழத்தியர் ஐந்நூற்றுவர் என்றும், க்ஷத்திர சூளாமணி என்ற நூல் கூறும்.] 'முளைகள் துஞ்சும் மார்பு' எனவே முன் தனக்கு நிகராக எறிவாரின்மை பெறப்பட்டது; 'மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர் - மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப' (புறநா. 10) என்றார் பிறரும். 'யானை ஆழ எறிந்தான்' என முடிக்க.
|
( 254 ) |
வேறு
|
|
284 |
புண்ணிடங் கொண்ட வெஃகம் |
|
பறித்தலிற் பொன்ன னார்தங் |
|
கண்ணிடங் கொண்ட மார்பிற் |
|
றடாயின காது வெள்வேன் |
|
மண்ணிடங் கொண்ட யானை |
|
மணிமருப் பிடையிட் டம்ம |
|
விண்ணிட மள்ளர் கொள்ள |
|
மிறைக்கொளி திருத்தி னானே. |
|
(இ - ள்.) புண்இடங் கொண்ட எஃகம் பறித்தலின் - மார்பிலே தைத்து நின்ற வேலைப் பறித்ததால்; பொன்னனார்தம் கண் இடம்கொண்ட மார்பில் தடாயின காது வெள்வேல் - திரு
|
|