| முத்தி இலம்பகம் |
1551 |
|
|
| 2741 |
கருமக் கடல்கடந்த கைவலச் செல்வ | |
| |
னெரிமலர்ச் சேவடியை யேத்துவார் யாரே | |
| |
யெரிமலர்ச் சேவடியை யேத்துவார் வான்றோய் | |
| |
திருமுத் தவிராழிச் செல்வரே யன்றே. | |
| |
|
|
(இ - ள்.) கருமக் கடல் கடந்த கைவலச் செல்வன் - இரு வினையாகிய கடலைக் கடந்து அதனாற் பெற்ற கேவல மடந்தையை நுகருஞ் செல்வனின்; எரிமலர்ச் சேவடியை ஏத்துவார் யார்? - பிறவியைச் சுடும் மலரனைய சேவடியை வணங்குவார் யாவராய் இன்புறுவர்? (எனின்); எரிமலர்ச் சேவடியை ஏத்துவார் அன்றே - அவ்வாறு எரிமலர்ச் சேவடியை வணங்குவாரல்லரோ; திருமுத்து அவிர் ஆழிச் செல்வர் - அழகிய முத்து விளங்குகின்ற கொற்றக்குடையுட்ன் எப்போதும் வருகின்றனவர்?
|
|
(வி - ம்.) இம்மூன்று தாழிசையாலும் வணக்கத்தாற் பெறும் பயனை அரசியர் கேட்டுணரும்படி கூறி வணங்கினான்.
|
|
கருமம் என்றது இருவினைகளின் ஈட்டத்தை. கடத்தற் கருமையுடைமையின் கடல் என்றார். கைவலச் செல்வம் - வீட்டின்பம். கைவலம் - கேவல மடந்தை. செல்வன் - அருகன். எரிமலர் - தாமரை மலர். முத்துஅவிர் ஆழி - கொற்றக்குடை. ஆழி - வட்டம். குடைக்கு: ஆகுபெயர்.
|
( 143 ) |
வேறு
|
| 2742 |
வண்ண மாமல் மாலை வாய்ந்தன | |
| |
சுண்ணங் குங்குமந் தூமத் தாற்புனைந் | |
| |
தண்ணல் சேவடி யருச்சித் தானரோ | |
| |
விண்ணி லின்பமே விழைந்த வேட்கையான். | |
| |
|
|
(இ - ள்.) விண்இல் இன்பமே விழைந்த வேட்கையான் - வானுலகில் இல்லாத வீட்டின்பத்தையே விரும்பின வேட்கையுடையான்; வாய்ந்தன வண்ண மாமலர் மாலை - பொருந்தினவாகிய அழகிய மலர்மாலையாலும்; சுண்ணம் - சுண்ணப் பொடியாலும்; குங்குமம் - குங்குமக் குழம்பினாலும்; தூமத்தால் - நறுமணப் புகையாலும்; புனைந்து - அணிந்து; அண்ணல் சேவடி அருச்சித்தான் - இறைவன் சேவடியை அருச்சித்தான்.
|
|
(வி - ம்.) வண்ணம் - நிறம். சுண்ணம் - நறுமணப்பொடி.
|
( 144 ) |
7. அறவுரை
|
| 2743 |
இலங்கு குங்கும மார்ப னேந்துசீர் | |
| |
நலங்கொள் சாரணர் நாதன் கோயிலை | |
| |
வலங்கொண் டாய்மலர்ப் பிண்டி மாநிழற் | |
| |
கலந்த கன்மிசைக் கண்டு வாழ்த்தினான். | |
| |
|