| முத்தி இலம்பகம் |
1552 |
|
|
|
(இ - ள்.) இலங்கு குங்கும மார்பன் - விளங்குங் குங்கும மணிந்த மார்பன்; நாதன் கோயிலை வலம்கொண்டு - (வானிலிருந்திருங்கி) இறைவன் கோயிலை வலம் வந்து; ஆய்மலர்ப் பிண்டி மாநிழல் - ஆராய்ந்த மலரையுடைய பிண்டியின் பெரு நிழலிலே; கலந்த கல்மிசை - அந்நிழல் தங்கிய பளிங்குக் கல்லின்மேல்; ஏந்துசீர் நலம்கொள் சாரணர் - மிகுபுகழுடைய நலங்கொண்டு நின்ற சாரணர் இருவரை; கண்டு வாழ்த்தினான் - கண்டு வாழ்த்தினான்.
|
|
(வி - ம்.) 'மாநிழல் கலந்த சாரணர்' என இயைத்துப், 'பெரிய இரண்டு மணிகளின் நிறத்தைக் கலந்த சாரணர்' என்றும், 'மேல் இரு சுடரை உவமித்தலின் மாணிக்கமும் முத்துமே கொள்க' என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர்.
|
( 145 ) |
| 2744 |
உரிமை தன்னொடும் வலங்கொண் டோங்குசீர்த் | |
| |
திரும கன்பணிந் திருப்பச் செய்தவ | |
| |
ரிருநி லம்மனற் கின்ப மேயெனப் | |
| |
பெருநி லம்மனன் பெரிதும் வாழ்த்தினான். | |
| |
|
|
(இ - ள்.) ஓங்குசீர்த் திருமகன் உரிமை தன்னொடும் வலம் கொண்டு இருப்ப - வளரும் புகழுடைய அவ்வரசன் தன் மனைவியருடன் (அவர்களை) வலம் வந்து வணங்கி இருந்த அளவிலே; செய்தவர் இருநிலம் மனற்கு இன்பமே என - அச் சாரணர் இப் பெருநிலம் மன்னனுக்கு இன்பமாயிற்றோ என்று வினவ; பெருநிலம் மனன் பெரிதும் வாழ்த்தினான் - (அதைக் கேட்ட) அம் மன்னன் அவர்களைப் பெரிதும் போற்றினான்.
|
|
(வி - ம்.) தான் துறவுபூண விரும்புவதை அவர்கள் உணர்ந்தமை அறிந்து வாழ்த்தினான். மனன், மனற்கு : செய்யுள் விகாரம், இன்பமே; ஏ : எதிர்மறைப் பொருளையுணர்த்தும் வினாவிடைச் சொல்.
|
( 146 ) |
| 2745 |
தெருள லேன்செய்த தீவி னையெனு | |
| |
மிருள்வி லங்கநின் றெரியு நீள்சுட | |
| |
ரருளு மின்னெனக் கடிக ளென்றனன் | |
| |
மருள்வி லங்கிய மன்னர் மன்னனே. | |
| |
|
|
(இ - ள்.) மருள் விலங்கிய மன்னர் மன்னன் - இல்லற மயக்கம் தீர்ந்த வேந்தர் வேந்தன்; அடிகள் - அடிகளே!; தெருளலேன் செய்த தீவினை எனும் - பிறப்பறுமாறு அறியாதேன் செய்த தீவினை என்கிற; இருள் விலங்க - இருள் நீங்குமாறு; நின்று எரியும் நீள்சுடர் எனக்கு அருளுமின் - சிலநாள் நின்று (தவம்புரிந்து) பின்னர் எரியும் பெருஞ்சுடராகிய அறிவை அடையும்படி எனக்கு அருள்வீராக; என்றனன் - என வேண்டினான்.
|