பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1553 

   (வி - ம்.) இனி, இருள் விலங்குமாறு நின்று எரியும் நீள்சுடர் நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்னும் இரத்தினத் திரயமும் ஆம்.

( 147 )

வேறு

2746 பாற்கடற் பனிமதி பரவைத் தீங்கதிர்
மேற்பட மிகநனி சொரிவ தொப்பவே
நூற்கடன் மாதவ னுனித்த நல்லறங்
கோற்கடன் மன்னனுக் குரைக்கு மென்பவே.

   (இ - ள்.) பனிமதி பரவைத் தீங்கதிர் பாற்கடல் மேற்பட மிகநனி சொரிவது ஒப்ப - குளிர்ந்த திங்கள் தன்பரவிய இனிய கதிரைப் பாற்கடல்மேற் பொருந்த மிகவும் நன்றாகப் பொழிவதைப்போல; நூற்கடல் மாதவன் நுனித்த நல்அறம் - நூற்கடலாகிய சாரணன் நுண்ணிய நல்ல அறங்களை; கோல்கடன் மன்னனுக்கு உரைக்கும் - செங்கோல் நடத்துங் கடமைபூண்ட வேந்தனுக்கு விளம்புவான்.

   (வி - ம்.) பாற்கடல் - சீவகனுக்கும் பனிமதி சாரணனுக்கும் உவமை. நூற்கடல் மாதவன் என்றது சாரணனை. கோல் - செங்கோல். செங்கோல் நடாத்துதலைக் கடனாகவுடைய மன்னன் என்க.

( 148 )
2747 தேனெய் தோய்ந்தன தீவிய திருமணி யனைய
வானி னுய்ப்பன வரகதி தருவன மதியோ
ரேனை யாவரு மமுதெனப் பருகுவ புகல்வ
மான மில்லுயர் மணிவண்ண னுவலிய வலித்தான்.

   (இ - ள்.) மானம் இல் உயர் மணிவண்ணன் - ஒப்பில்லாமல் உயர்ந்த மணிவண்ணன் என்னும் சாரணன் ; தேன்நெய் தோய்ந்தன தீவிய வானில் உய்ப்பன ஏனையாவரும் புகலவ - தேனாகிய நெய் தோய்ந்தாற் போன்ற இனிமையுடையனவாய்ச் சிலநாள் துறக்கத்தே செலுத்துவனவாய் அறிவில்லோர் யாவரும் புகல்வனவற்றையும்;  திருமணி அனைய வரகதி தருவன மதியோர் அமுதெனப் பருகுவ - பெறுதற்கரிய மணியை ஒத்தனவாய் வீட்டைத் தருவனவாய் அறிவுடையோர் யாவரும் அமுதெனப் பருகுவனவற்றையும்; நுவலிய வலித்தான் - கூறுதற்குத் துணிந்தான்.

   (வி - ம்.) தேன் நுகர்வார்க்கு, அது புளிச்சுவையுந் தருதலின், நிலையில்லாத துறக்கந் தருகின்ற அறத்திற்கு உவமையாயிற்று. துறக்கத்தையும் வீட்டையுந் தருகின்ற இருவகை அறத்தையுங்கூறினான், இவற்கு இன்னும் துறக்கத்திற் செல்லுங் கருத்து உண்டாமோ என்று உணர்தற்கு.

( 149 )