|  முத்தி இலம்பகம் | 
 1555  | 
 | 
  | 
| 
    இட்டதோர் திருமணி வான்கழி - வடகடல் நுகத்துளை வந்துபட்டாஅங்கு“ (பெருங். 1. 32 : 17 - 18) என்பன இங்கு ஒப்பிடத்தக்கன. 
 | 
 ( 151 ) | 
|  2750 | 
விண்டு வேய்நர லூன்விளை கானவ ரிடனுங் |   |  
|   | 
கொண்டு கூர்ம்பனி குலைத்திடு நிலைக்களக் குறும்பு |   |  
|   | 
முண்டு நீரென வுரையினு மரியன வொருவி |   |  
|   | 
மண்டு தீம்புனல் வளங்கெழு நாடெய்த லரிதே. |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) விண்டு வேய் நரல் ஊன் விளை கானவர் இடனும் - வெடித்து மூங்கில் ஒலிக்கும் ஊனே உணவாக விளையும் வேடர் குடியும்; கூர்ம்பனி கொண்டு குலைத்திடும் நிலைக்களக்குறும்பும் - மிக்க பனியைக்கொண்டு குலைக்கும் இடம் ஆகிய குறும்புகளும் (என்கின்ற); உண்டு நீர் என உரையினும் அரியன ஒருவி - நீர் உண்டு என்று மொழியினும் அரியனவாகிய இவற்றை நீங்கி; மண்டு தீம்புனல் வளம் கெழு நாடு எய்தல் அரிது - மிகுதியான இனிய நீர்வளம் பொருந்திய நாட்டை அடைதல் அரியது. 
 | 
| 
    (வி - ம்.) வேய்நரல் கானவரிடன். ஊன்விளை கானவரிடம் எனத் தனித்தனி கூட்டுக. கூர்ம்பனி - மிக்க பனி. குறும்பு - குறுநில மன்னர் வாழுமிடம். உண்டுநீர் என உரையினும் அரியன என்றது வன்பாலைநிலப் பரப்புக்களை. தீம்புனல் வளங்கெழு நாடென்றது, மருதநிலமிக்க நன்னாடுகளை. 
 | 
| 
    இது வீடுபேறு இடம்நலம் இன்றியமையாது என்றது. 
 | 
 ( 152 ) | 
|  2751 | 
வில்லின் மாக்கொன்று வெண்ணிணத் தடிவிளிம்படுத்த |   |  
|   | 
பல்லி னார்களும் படுகடற் பரதவர் முதலா |   |  
|   | 
வெல்லை நீங்கிய விழிதொழி லிழிகுல மொருவி |   |  
|   | 
நல்ல தொல்குலம் பெறுதலு நரபதி யரிதே. |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) நரபதி! - மக்கள் தலைவனே!; வில்லின் மாக்கொன்று - வில்லாலே விலங்குகளைக் கொன்று ; வெள்நிணத்தடி விளிம்பு அடுத்த பல்லினார்களும் - வெண்மையான நிணமும் ஊனும் ஓரத்திற் பற்றித் தின்கின்ற பற்களையுடையவர்களும்; படுகடல் பரதவர் முதலா - மீன்படு கடலின் ஓரத்தில் வாழும் பரதவரும் முதலாக; எல்லை நீங்கிய இழிதொழில் இழிகுலம் ஒருவி - அளவு கடந்த இழிதொழிலைப் புரியும் இழிகுலத்தினின்றுந் தப்பி; நல்ல தொல்குலம் பெறுதலும் அரிது- உயர்ந்த பழங்குடியிற் பிறத்தலும் அரியது. 
 | 
| 
    (வி - ம்.) வில்லின் என்றது படைக்கலத்தால் என்பது பட நின்றது. மா - விலங்கு பறவைகள் நீர்வாழ்வன முதலியவற்றைக் குறித்து நின்றது. தடி - தசை. இழிதொழில் : கொலை களவு முதலியன. 
 |