| முத்தி இலம்பகம் |
1556 |
|
|
|
இது வீடுபேறு குலநல மின்றியமையாது என்றது.
|
( 153 ) |
| 2752 |
கருவி மாமழை கனைபெயல் பொழிந்தென வழிநா | |
| |
ளருவி போற்றொடர்ந் தறாதன வரும்பிணி யழலுட் | |
| |
கருவிற் காய்த்திய கட்டளைப் படிமையிற் பிழையா | |
| |
துருவின் மிக்கதோ ருடம்பது பெறுதலு மரிதே. | |
| |
|
|
(இ - ள்.) கருவி மாமழை கனை பெயல் பொழிந்தென - தொகுதியான பெருமுகில்கள் கூடி மிக்க மழையைப் பெய்ததாக; வழி நாள் - பின்னாளிலே; அருவிபோல் தொடர்ந்து - சில கல்லிடை அருவி இடையறாது ஒழுகுமாறு போல உயிர்க்கிழவனைத் தொடர்ந்து; அறாதன - விடாதனவாய்; அரும்பிணி அழலுள் - போக்குதற்கரிய இருவினை வயிற்றுத் தீயினுள்ளே; காய்த்திய கருவில் கட்டளைப்படிமையில் பிழையாது - இட்டு வைத்துக் காய்சின கருவின் கண்ணே, அவ் விருவினையின் கட்டளையாற் பின் தோன்றும் வடிவத்தின் (தீவினையின் கட்டளையால் உறுப்புக் குறையும்) வடிவைப் பெற்றுத் துன்புறாமல்; உருவின் மிக்கது ஓர் உடம்பது பெறுதலும் அரிது - (நல்வினையின் கட்டளையால்) அழகால் மேம்பட்டதாகிய ஓர் உடம்பை அம்மக்கள் யாக்கை பெறுதலும் அரியது.
|
|
(வி - ம்.) நற்குலத்தே பிறப்பினும் அழகுடன் பிறப்பது அரிது என்க.
|
|
பிணித்தலையுடையது பிணியாயிற்று. கட்டளை என்றார், தத்தம் பயனை நுகர்வித்தற்குரிய கோவையுடைய தாதலைப் பிழையா விதியினை.
|
|
இது வீடுபேறு நல்லுடல் இன்றியமையாது என்றது.
|
( 154 ) |
| 2753 |
காம னன்னதோர் கழிவனப் பறிவொடு பெறினு | |
| |
நாம நாற்கதி நவைதரு நெறிபல வொருவி | |
| |
வாம னூனெறி வழுவறத் தழுவின ரொழுக | |
| |
லேம வெண்குடை யிறைவமற் றியாவது மரிதே. | |
| |
|
|
(இ - ள்.) ஏம வெண்குடை இறைவ - காவலாகிய வெண்குடை யிறைவனே!; காமன் அன்னது ஓர் கழி வனப்பு அறிவொடு பெறினும் - காமனைப் போன்றதாகிய ஒரு சிறந்த அழகையும் அறிவையும் பெற்றாலும்; நாம நால் கதி நவைதரு நெறி பல ஒருவி - அச்சம் ஊட்டும் நாற்கதியிலே செலுத்தும் குற்றத்தைத் தரும் பிறநெறிகள் பலவற்றினின்றும் நீங்கி; வாமன் நூல்நெறி யாவதும் வழு அறத் தழுவினர் ஒழுகல் அரிது - அருகனார் நூலின் வழியை எல்லாவகையினும் குற்றமறத் தழுவினராக ஒழுகுதல் அரிது.
|